பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

107

நீதி வழங்குதற் பொருட்டே படைப்பாகிய விளையாட்டிலே இறைவன் ஈடுபடுகிறார்.

நீதி அல்லது ஒழுக்கம் என்பது ஒவ்வொருவரும் அவ்வவர்க்குரிய நன்மை தீமை ஆகிய செயல்கட்கு ஏற்ற பயன்களை அனுபவித்தே தீர் வேண்டும் என்பதாகும். இதைத்தான் இந்தியமெய்ப்பொருளியலில் புகழ்வாய்ந்து கரும நியாயமாக வழங்குகின்றனர். ஒருவன் ஒரு பிறவியிலேயே தனது கருமங்களுக்குரிய பலன்கள் துய்க்க இயலாததால் அடுத்தடுத்துப் பிறந்து எஞ்சுகின்ற கருமங்களுக்குரிய பயன்களை துய்த்தல் வேண்டும். அவன் ஒவ்வொரு பிறவியிலும் புதிய புதிய கருமங்களைச் செய்யத் தலைப்படுகிறான். அதனால் மீண்டும் மீண்டும் பிறக்க நேருகிறது. இது தொடர்ந்து நிகழ்கிறது. அத்தொடர்ச்சி கருமங்கள் அனைத்தும் ஆன்மீக ஒழுக்க நிறைவு ஏற்படுகின்றவரை அமையும். பின்னரே, அவன் விடுதலை அடைகிறான். அப்பிரபஞ்சம் இறுதியில் வெறுத்த ஒதுக்கத் தக்கது எனினும் ஓர் ஒழுக்க நோக்கு உடையது ஆகும்.

இப்பிரபஞ்சம் ஆன்மாக்களுக்கு பலவாய்ப் புக்களை நல்கிக் கட்ந்தகால கருமங்களின் விளைவுகளை நுகரச் செய்கிறது. நுகர்வின் வாயிலாக விடுதலை அடையவும் துணை செய்கிறது. ஆனால் மேலும் மேலும் அடைகின்ற பிறவிகளிலே புதிய செயல்களைச் செய்து மேலும், கருமத்தை ஈட்டினால் அவை பிறவிகட்கு காரணமாக அமையுமே தவிர விடுதலை காணுகின்ற நெறியாக அமையாது. சுயநலம் இன்றிச் செயல்களாகப் புரிவானேயானால் பயன்களாக அமையாது, தன்னலச் செயல்களே மேலுமேலும் பிறவிக்கட்கு வித்தாகும். தன்னலம் துறந்த - பயன் கருதாத செயல்கள், பிறவிப் பிணியை நீக்குவன. ஆதலால் இறைவன் பிரபஞ்சத்தினை ஆன்மாக்களது பழைய வினைகட்கு ஏற்பப் படைக்கிறார். பிரபஞ்சத்தில் ஆன்மாக்கள் அடைகின்ற துன்பங்கட்கும்