பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

த.கோவேந்தன்

இன்னல்களுக்கும் இறைவனைப் பொறுப்பாகக் கொள்வதற்கு இல்லை. ஆன்மாக்களே, அவரவர் கருமங்கட்கு ஏற்ப இன்ப துன்ப நுகர்வுகளை அடைதற்கு உரியவர் ஆவார்.

அத்துவிதக் கொள்கைக்கு மாறாக நிம்பார்க்கர் பிரமத்தைச் சகுணப் பிரமமாகக் கொள்கிறார். சகுணப் பிரமம் எண்ணிறந்த குண நலன்களோடு கூடியதாகும். இக்குண நலன்கள் இருவகையின. ஒருவகை: மாட்சி, முற்றறிவு, பேராற்றல், எங்கும் இருத்தல்போல்வன ஆகும். மற்றொரு வகை: இனிமை, அழகு, இன்பம், பேரரருள் ஆகியவற்றைப் போல்வன. பிரமம், பிரபஞ்சதைக் கடந்தும், பிரபஞ்சத்தின் அகத்தும் உள்ளதாகும் பேராற்றல் உடையது எனினும் பெருங்கருணை உடையதாகும். எங்கும் நிறைகின்ற இயல்பு உடையது எனினும், ஒவ்வொருவன் உள்ளத்திலும் நிலைபெற்று விளங்குவதாகும்; ஆட்சி புரிவது எனினும், துணை செய்வதாகும்.

இறைவன் மாட்சியும், வல்லமையும் உயர்வற விளங்குகின்றன. இவ்வியல்புகளால், இறைவனது உண்மை இயல்பினை நாம் அறிதல் இயலாது. எல்லைகடந்த அன்பும் இனிமையும் அவனது சிறந்த இயல்புகளாகும்.

பிரமத்தின் இயல்பும் குண நலன்களும் வரையறை செய்யப்பெற்ற பின்னர் எழுகின்ற கேள்வி. பிரமத்தின் உண்மையினை எவ்வாறு நிறுவுவது? என்பதாகும்.இதற்கு அமையும் விடை, வேதமே பிரமத்தை மெய்ப்பிப்பது என்பதாகும். பிரமம் வேதாந்தத்துள் வேதத்தினால் அறியப்பெறுகிறது என்று கூறப்பெற்றுள்ளது.

வேதம், பலவகையான பொருள்களைப் பற்றி விவாதித்தாலும், பிரமத்தையே உண்மையில் விளக்குகிறது. தனிக்காட்சி யாலோ, கருதுதலாலோ, பிரமத்தை அறிதல் இயலாது. எப்புலனும் பிரமத்தைக் காண இயலாது. கருதல் முறையில் எதைப் பின்பற்றினாலும்,