பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பாரதத்தில் செழித்த வைணவம் ஆன்மாவை அழிக்காது. அதன் எல்லைக் குட்பட்ட தன்மையை மாற்றி எல்லைக்குட்பட்டு பிரமமாகச் செய்ய வல்லது இது; இவற்றால் உளபொருள் பிரமம் எனப் பெறும், தொன்று தொட்டு விசிஷடாத்வைதம் மரபுகளோடு தொடர்புடையதாகும். வரலாற்று வளர்சசி குட்பட்டு விசிஷ்டாத்வைதம் சிறநத விளககம பெற்றுள்ளது. இக்காரணங்களால் விசிஷ்டாத்வைதம் என்ற மரபுகளோடு தொடாபுடையதாகும். வரலாறறு வளர்ச்சி நிலைகளில்விசிஷ்டாத்வைதம் சிறந்த விளக்கம பெற்றுள்ளது. இக்காரணங்களால் விசிஷ்டாத்வைதம் முக்கியமாகச் சமயம் குறித்த மெய்ப்பொருளியலாகும்; இதில் அறிவும் நம்பிக்கையும் ஒன்றி, இது அறிவினால் பெற்ற நம்பிக்கை ஆகிறது.

 “எந்த ஒன்றை அறிவதால் அனைத்தையும் அறியலாமோ, அந்த ஒன்று யாது?" இது குறித்த சிக்கலை ஆய்வதே விசிஷ்டாத்வைததின் குறிக்கோளாகும். விசிஷ்டாத்வைதம்மேற்குறித்த கேள்விக்குத்தரும் விடை, 'பிரமம்' என்பதாகும். பிரமத்தை அறிவதால் அனைத்தையும் ஒருங்கே அறியலாம் என்பது பொருள்.உள் பொருள் அறியக்கூடியது; உணரக் கூடியது; அறிவால் உணர்ந்து கொள்ளதக்கதன்று எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவறறையும் அறியலாமோ, அந்த ஒன்றை அறிகின்ற முறைமையைப் பற்றிய பழைய விளக்கம, தைததிரீய உபநிடத்தில் வருணனுக்கும் அவரது மகன் பிருகுவிறகும் இடையே நிகழந்த உரையாடலில் காணப்பெறுகிறது. இவ்வுரையாடலில் ஆசிரியராக விளங்கும் வருணன்: சீடனிடம் இருந்து படிப்படியே உண்மையினை வெளிப் படுத்துகிறார். பிரம்ம, அன்னமயம பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் எனறு படிப்படியாய் உரைக்கச் சீடன் கறறலின் முறையின் மூலம் உண்மையினை உணரத் தலைப்படுகின்றான்.
 விசிஷ்டாத்வைத வரலாறு மற்றைய வேதாந்தக் கருத்து முறைகளைப் போலவே நினைவுகூற முடியாத