பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

111


இந்திய மெய்ப்பொருளியலார், என்றுமே மனித அறிவிலே, படி நிலைகள் பல உண்டு என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். படுநிலைகள் பல உண்டு என்று கொள்ளுகிறபொழுது அறிவிலே, வளர்ச்சியுறாத நிலைகளும் மிகு வளர்ச்சியுடைய நிலைகளும் உண்டு என்பதை ஏற்பதாகும். சாதாரண வாழ்விலும்கூட, அறிவுள்ளபடி நிலைகளை நாம் ஒத்துக்கொளல் வேண்டும்.

தந்தைக்கு நன்கு புரிகின்ற ஒன்று தனயனுக்குப் புரிவதில்லை. தனயன் தந்தையை நம்பியே அறிந்து கொள்ளல் வேண்டும். விஞ்ஞானிக்கு எளியவனவாகவும் எளிதில் புரிந்துகொள்ளத் தக்கனவாகவும் உள்ள உண்மைகள், விஞ்ஞானம் பயிலாத ஒருவனுக்கு அரியனவாக அமையக் காண்கிறோம்.

விஞ்ஞானம் பயின்று, விஞ்ஞானியின் துணைக் கொண்டு விஞ்ஞான உண்மைகளைத் தெரியலாம். இதேபோல அறிந்தோன் துணைக்கொண்டு, அவர்கள் தெளிந்த, உணர்ந்த உண்மைகளை உணர்வது, சாதாரண மனிதருக்குப் பெரும் துணையாகும். தெளிந்தோரும், உணர்ந்தோரும் துணை செய்தால் அன்றி இறைவனைக் குறித்து ஏதும் அறிதல் இயலாது.

சாதாரண மக்கள் நிலையிலும் சிந்தனையும், அறிவும் அமைய வேண்டும் என்று இந்திய மெய்ப் பொருளியலார் வற்புறுத்துகின்றனர். மறை நூல்களிலிருந்து கேட்டறிந்த மெய்ப்பொருளியல் உண்மைகளை நன்கு சிந்திக்க வேண்டும் என்பதே இந்திய மெய்ப் பொருளியலாரின் குறிப்பாகும்.

கேட்டனவற்றை சிந்திக்க வேண்டும் என்று கண்டோம். சிந்தித்த பேருண்மைகளை இடையறாது தியானித்தால் அன்றி உண்மையினை நேரர்க உணர்தல்