பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

த. கோவேந்தன்

இயலாது. இங்கு மறை நூல்கள் கூறும் உண்மைகளில் நம்பிக்கை வைத்துக் கேட்கிறோம். பின்னர் அவ்வுண்மைகளை அளவை முறையிலே சிந்திக்கிறோம். உண்மைகளின் திறத்தைச் சோதிக்கிறோம்.

ஆன்மாவும், சடப்பொருளும்

உள்பொருள்களுள் இரண்டாவதாக அமைவது 'சித்' ஆகும். 'சித்' அறிவுடையது; 'சித்' ஆன்மா ஆகும். நிம்பார்க்கர் கருத்துப்படி ஆன்மா உண்மையிலே உணர்வு ஆகும். உணர்வோடு அறிபவன், ஆன்மா ஆகும். ஆன்மா செயல்வல்லவன் ஆவான். செயல்களால் விளையும் பயன்களை நுகர்வோன் ஆவான். அத்துவிதக் கொள்கை. ஆன்மாவின் ஒற்றுமையையும், யாவற்றிற்கும் பொதுவாக உள்ள தன்மையையும் வற்புறுத்துவதாகும்.

நிம்பார்க்கர், அத்துவிதக் கொள்கைக்கு எதிரராக ஆன்மாக்கள் பல என்றும், அவை அனுத்தன்மை யுடையன என்றும் கூறுகிறார். நிம்பார்க்கர் கருத்துப்படி எண்ணிறந்த, எண்ணுதற் கரிய, சிறுவடிவம் உடைய ஆன்மாக்கள் ஒன்றையொன்று ஒத்தனவாகவும் இல்லை; பிரமத்தோடு ஒத்தனவாகவும் இல்லை. விடுதலை பெற்ற ஆன்மாக்களும், இறைவனோடு ஒன்றிவிடாது.தமது தனி நிலையினைக் காக்கின்றன.

நிம்பார்க்கர் கருத்துப்படி வீடுபேறு என்பது ஆன்மாவினது தனித்தன்மையின் அழிவு அன்று. ஆனால், அழிவிற்கு மாறாக ஆன்மாவின் உண்மையான இயல்பும் பண்புகளும் முழுவளர்ச்சி உறுகின்றன. இவ்வாறு, மேலானதன் வளர்ச்சிபெற்றபிறகு ஆன்மா.இறைவனது இயல்பையும், பண்புகளையும் பெறுகின்றது. இறைவன் ஒத்த நிலையில் ஆன்மாக்கள் வளர்ச்சியுற்ற நிலையில் அமைகின்றன. வீடுபேறு. மரணத்திற்குப் பின்னே அடையத்தக்கது. இம்மையில், இப்பொழுதே வீடுபேறு அடை