பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதத்தில் செழித்த வைணவம்

113

யக்கூடும் என்று அத்துவிதிகள் கொள்வது நிம்பார்க் கருக்கு உடன்பாடு அன்று.

வீடுபேற்றினைப் பெறுகின்ற நெறி குறித்து நிம்பார்க்கார் நேரிய, அறநெறியையே வற்புறுத்துகிறார். அறநெறியே குறித்தஇலட்சியத்தை அடைவதற்குத்துணை புரியும். நிம்பார்க்கர், ஐவகையான சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளைக் குறிக்கிறார். (1) கருமநெறி (2) ஞான நெறி (3) பக்தியும் உபாசனையும் ஒன்றிய நெறி (4) பிரபக்தி அல்லது இறைவன்சிடத்தில் முற்றிலும் தன்னை ஒப்படைத்த பிரபக்தி நெறி (5) குரு அல்லது ஆன்மீகத் துறையில் ஆசிரியராக விளங்குகின்றவரிடத்தில் தன்னையே ஒப்புவிக்கின்ற நெறி.

கரும நெறி ஒன்றே வீடுபேற்றுக்கு வழி செய்யாது. ஆனால் கருமங்கள் தன்னலம் அற்ற நில்ையில், ஆற்றுப் பெறும்போது அக்கருமங்கள் மனத்தைத் தூய்மைப் படுத்துகின்ற மனம், தூய்மை பெறுகிறபோது,ஞானமும், பக்தியும் தோன்றுகின்றன. மேற்குறித்த ஐவகைப் பயிற்சி களும், கருமம், ஞானம், பக்தி உபாசனை ஆகிய மூன்றும் தன்னம்பிக்கையோடு, அருமுயற்சிகளையும் ஆழ்ந்த தியானத்தையும் இடையறாத செயல் நிலைகளையும் மேற்கொள்வோர் பயிலுதற்கு உரியன என்று வரையறை செய்யப்பெற்றுள்ளன.

இறைவனிடத்து அர்ப்பணித்து ஒழுகுதலும், குருவிடத்து அர்ப்பணித்து ஒழுகுதலும் ஆகிய இடுங்கை ஒழுகலாறுகள் தன்னம்பிக்கையுடையோர், மேற்கொள்ளுதற்குரியனவாக குறிக்கப்பெறுகின்றன. இவர்கள் இடையறாது மற்றவர்களால் வழிகாட்டப் பெற வேண்டும்; துணை புரியப்பெறல் வேண்டும். யாரிடத்து முழுநம்பிக்கையை வைக்கின்றார்களோ அவர்களே வழிகாட்டவும், துணை செய்யவும் வேண்டும். குருவோ அல்லது கடவுளோ இங்கு வழிகாட்டுதற்கு உரியர்.