பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

115


சங்கரர் கருத்தினைச் சுருங்கக் கூறின் பிரமம் ஒன்றே உள்பொருள். இப்பிரபஞ்சம் மாயை எனப் படுவதால், பிரபஞ்சத்திற்குத் தனித்த நிலையில் உண்மையில்லை ஆதலால், பிரபஞ்சம் பிரமத்தின் வேறு அன்று.

சங்கரர் வற்புறுத்துவது அபேதமாகும். இராமானுஜர் கருத்துப்படி பிர்மம் போல், இப்பிரபஞ்சமும் உண்மையே ஆகும். பிரபஞ்சமும், பிர்மமும் அத்துவித உறவிலும்,துவைத உறவிலும்இருப்பதாகக் கொள்கிறார். ஆனால், இராமானுஜர் பெரிதும் அபேதஉறவினையே வற்புறுத்துகிறார். ஆதலால் இராமானுஜரது கொள்கை, அடைமொழியேற்ற அத்துவித்ம் எனக் கூறப்பெறுகிறது.

நிம்பார்க்கர் கருத்துப்படி இவ்வுலகு உண்மையே. பிரமத்தின், வேறாகவும், பிர்மத்தோடு ஒன்றியும் பிரபஞ்சம் விளங்குகிறது. இங்குப் பேதத்தையும் அபேதத்தையும் ஒருங்கே, நிம்பார்க்கர் வற்புறுத்துகிறார். மாத்வரது கருத்துப்படி பிரபஞ்சம் பிரமத்தின் வேறானது. வேறுபாடு, முற்றிலும் உண்மை என வற்புறுத்தப் பெறுகிறது.வல்லவரது கருத்துப்படி பிரபஞ்சம் உண்மையாகும். ஆனால் பிரமத்தின் வேறு அன்று.

நிம்பார்க்கரது கருத்துமுறை.இராமனுஜரது கருத்து முறையைப்பெரிதும் ஒத்தது:இருப்பினும், நிம்பார்க்கரது கருத்து முறைக்குத் தனி இடம் தந்து ஐவகை மூல வேதாந்தக் கருத்துக்களுள் இது ஒன்றெனக் குறிக்கப் பெறுகின்றது. இவ்வாறு, ஐவகைக் கருத்துகளுள், ஒன்றெனக் குறிக்கப்பெற்றுள்வதற்குக் காரணம். நிம்பார்க்கர புதுமையான விளக்கமேயாகும்.

மெய்ப்பொருளியலுள் அடிப்படையான சிக்கலாக அமைவது உள்பொருள் ஒன்றாய் இருக்க உலகு எவ்வாறு பன்மைக் காட்சியை வழங்குகிறது என்பதாகும். இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவு யாது? என்பதும்,