பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 த. கோவேந்தன்

அடிப்படைச் சிக்கலே நிம்பார்க்கர், வேறுபாடு அல்லது பேதம், ஒருமை அல்லது அபேதம், ஆகிய இரு நிலைகளும் ஒத்த நிலையில் உண்மையாக விளங்குவதோடு ஒருங் கேயும் உண்மையாக விளங்குகின்றன என வற்புறுத்துகிறார்.

   உறவு எவ்வாறு ஒத்ததாகவும், வேறுபடுவதாகவும், ஒருங்கே விளங்க இயலும், இவ்வாறு கூறுவது முரண் படுகின்றதாகாதோ? நிம்பார்க்கரது விடை சுருக்கமாக அமையினும், அளவை நெறியிலே அமைந்து ஐயத்தை அகற்றுவதாகும். நிம்பார்க்கர் காரண காரிய உறவின் அடிப்படையில் தமது விளக்கங்களை அமைக்கிறார். காரண காரிய உறவு முற்றிலும் ஒருமைப்படுவது அன்று: வேறுபடுவன அல்ல; ஆனால் வேற்றுமையிடையே ஒற்றுமை உடையதாகும்.இதனைப் பேதா பேதம் என்பர்.
   காரியம், காரணத்தின் வேறாகும். காரியம், சிறப்பியல்புகளைக் கொண்டது; தனித்த சில செயற்பாடுகளை உடையது. மண் ஜாடி காரியமாகும். மண் ஜாடிக்குத் தனித்த இயல்பும், வடிவமும், உண்டு. நீரைக் கொணர்தற்குத் தொழில்படுவதாகும். களிமண், காரண மாகும். காரணம், மேற்குறித்த தொழிலை உடையது அன்று. மேலும், காரியம், காரியத்தின் வேறென்று எனவும் கூறலாம். ஏனெனில் காரியத்தின் மாறுபாடு ஆகவே காரியம் விளங்குகிறது. மாறுபாடு எனினும் காரணமே யாகும். மண் ஜாடி மண்ணின் வேறன்று. மண்ணேயாகும். மண் இன்றி ஜாடி அமையாது. ஜாடி தனது தோற்றத்திற்கும், இருப்பிற்கும் மண்ணையே சார்ந்து உள்ளது.
   ஒருபுறம், காரணம், காரியத்தின் வேறு என்ற குறித்தற்கு இடம் உண்டு. ஏனெனின் காரியம், காரணத்தை முழுவதும் விளக்காது, காரியத்தின் மேலாக, காரணம் விளங்குகிறது. களிமண், மண் ஜாடியினின்று வேறு என்று மட்டும் கூறினால், அமையாது. மண்ணினால் தோன்றும், எத்தனையோ பொருள்கட்கு வேறாக மண்