பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 த. கோவேந்தன் தொல் மரபினைத்தனக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது விசிஷ்டாத்வைதம் மூன்று நூல்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது உபநிடதங்களைத் தந்த பெரியோர், தம் உள்உணர்வினால் தெளிந்த உண்மைகளை முறைப் படுத்தி வேதாந்த சூத்திரங்களாக அமைத்த பாதராயணர், உபநிடத உட்கிடையை விளக்கும் பகவத்கீதையின் ஆசிரியரான கிருஷ்ணர் ஆகியோர் விசிடாத்வைதத்தால், தலைமையிடத்தைப் பெற்றனர்.விசிஷ்டாத்வைதத்தை வர லாற்று முறையில் முதலிலே விளக்கியவர் இராமனுஜரே.

  இராமனுஜர், பிரம சூத்திரங்கட்குப் பேருரை கண்டவர். இப்பேருரைகள் வேதாந்த சங்கிரகம் எனவும், ஶ்ரீபாஷ்யம் எனவும் வழங்கப்பெறும் இப்பேருரைகட்கு இராமனுஜர், ஆசானாக இருந்து பேர்தாயன விருத்தி யையும், பிரமிடர், தங்கர், குக்தேவர் ஆகியோரது முற்பட்ட போதனைகளையும் தாம் ஆதாரமாகக் கொண்டுள்ளதைக் குறிக்கிறார். மேலும், ஶ்ரீவைஷ்ணவத்தின் தலை சிறந்த அனுபூபதியாகிய நம்மாழ்வார்போதனைகளையும் இராமானுஜர் மேற்கொண்டுள்ளதைக் காணலாம்.
  தென்னாற்காடு மாவட்டத்தில் கி.பி. 824-ல் பிறந்த நாதமுனி, வடபுலத்தில் வழங்கிய பாகவத மரபினைச் சேர்ந்தவர் ஆவர். நாதமுனி, ஆழ்வார்களது தெய்வீகத் தமிழ்ப் பாடல்களை வேதாந்த நிலைக்கு உயர்த்தினார். உபயவேதாந்தம் என்னும் போதம் இதற்குத் துணை நின்றது. உபயவேதாந்தம் அக உணர்வினின்று எழுகின்ற மொழியையே உண்மையான ஆன்மிக மொழி எனக் உரைகின்றது. அவை பேச்சு வழக்கில் உள்ள வெறும் சொற்கள் அல்ல: (அவற்றைச் சொற்பொருளில் கொள்வதைவிட அச்சொற்களின் உட்பொருள் நாடி உள் உணர்வினின்றும் பிறந்தன எனக் கொள்ள வேண்டும்). நாதமுனிக்கு அடுத்து விசிஷ்டாத்வைதத்தைப் போதித் தவர் ஆளவந்தாராவர்.ஆளவந்தார் நாதமுனியின்பேரர். விசிஷ்டாத்வைதத்தை விளக்கி வேதாந்த உண்மைகளை