பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 119

இறைவனும் வேறுபடுபவை அல்ல என்று குறிக்கப்பெறும் புகழ் வாய்ந்த நிம்பார்க்கர் கொள்கை ஆகும்.

   உள்பொருளாகிய ஒன்றிற்கும், உலகு வழங்குகின்ற பன்மைக்கும், இடையேயுள்ள உறவைப் பற்றிய தீராத சிக்கல் உண்டு. இச்சிக்கலுக்கு மெய்ப்பொருளியல் வரலாற்றில் முக்கிய விளக்கமொன்றை நிம்பார்க்கர் தந்துள்ளார் என மேற்குறித்த கொள்கையினைக் கொள்ளலாம். இதுவன்றியும் நிம்பார்க்கரது வேறு சில முடிவுகளும், நிம்பார்க்கரது திறமையை விளக்கு வனவாகும். மெய்ப்பொருளியலுள் அடிப்படையான சிக்கல்கள் சிலவற்றிற்கு நிம்பார்க்கர் தந்துள்ள விளக்கங்கள் பாராட்டிற்கு உரியன. குறிப்பாக சக்திவாதம், என்பது அவற்றுள் ஒன்றாகும். மெய்ப்பொருளியலில் விடை காணுவதற்கு அரியது எனவும், சிக்கல் மிக்கது எனவும் கொள்ளப்பெறுகின்ற சிக்கல்களைக் குறித்து நிம் பார்க்கர் சக்திவாதம் என்ற விளக்கத்தின் மூலம், தீர்வு காணுகின்றார். இத்தீர்வு, தீர்வு காண முடியாத மிகச் சிக்கலான பல கருத்துகளை விளக்குகிறது.
   சமய உலகிலும், நிம்பார்க்கரது பங்கு குறிக்க தக்கதே.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே அமைய வேண்டிய உறவு, இனிமையுடையதாகவும் நெருக்க முடையதாகவும் அன்பு மிக்கதாகவும், தோழமையுடைய தாகவும் இருக்க வேண்டும் என்பது அடுத்தடுத்து நிம்பார்க்கரால் வற்புறுத்தப்பெறுகின்றது. இறைவனது மாட்சியும், பெருமையும் அச்சத்தையும், பணிவன்மையும் விளைத்தலால் சமயத்தின் தோற்றம் இவ்விளைவிலே அடங்குகிறது.
   சமயம், இறைவனோடு கொள்ளுகின்ற இனிய, நெருங்கிய, நேரான, உறவிலே முழுமையுறு வதாகும். தானே, வலிய புறத் துாண்டுதலோ அல்லது வற்புறுத்தலோ இன்றி அன்பின் மிகுதியால் அச்சமின்றி இறைவனி