பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 11 நிறுவும் பாஞ்சராத்ரங்களை நிலைபெறச்செய்தார்.இவர் இராமனுஜர் ஆளவந்தாருக்குப் பிறகு வேதாந்தத்தை விளக்குகின்ற விசிஷ்டாத்வைத்தின் சிறந்த ஆசிரியராக விளங்கினார்.

  சங்கரர் பெளத்த நிர்வாணத்தைப் புதிய முறையில் விளக்கி, அத்வைத உண்மையை மெய்ப்பித்தார். சங்கரருக்குப் பிறகு தோன்றிய பாஸ்கரர், சங்கரது மாயக் கொள்கையினைத் தனது உபாதிக் கொள்கையினாலும் பேதாபேதக்கொள்கையாலும் மறுத்தார். பாஸ்கரருக்குப் பிறகு தோன்றிய யாதவர், பேதாபேதத்தைப் பெரிதும் ஏற்புடையதாக உலகு உண்மையை வற்புறுத்துவதாகச் செய்தார்.இப்பொழுதுஇராமானுஜர்மெய்ப்பொருளியலுக்குப் புதிய திருப்பம் தந்து இவற்றை இணைத்துக் காணும் தொகைக் காட்சியை வழங்கும் அன்பின் மெய்ப்பொருளியல்ை நிறுவவேண்டுவதாயிற்று.
  இராமானுஜருக்குப் பிறகு சிறிது காலத்திற்குள் உபய வேதாந்தம் என்பதன் பொருளைப் பற்றி முரண் பாடுகள் தோன்றின.ஈஸ்வரனது இயல்பும், ஶ்ரீ என்பதன் இயல்பும் பக்தி, பிரபக்தி ஆகியவற்றின் பொருளும், கருத்து வேறுபாட்டுக் காரணமாயின. வேதாந்த தேசிகர் உபயவேதாந்தத்தின் இருகூறுகளையும் ஒன்றுபடுத்தினர். பிள்ளைலோகாச்சாரியார் தமிழ்வேதாந்தத்தை வற்புறுத் தியவர். கடவுள் ஒருவரே என்றும் அவர் திருவருள், ஆற்றல் நிறைந்தவர் என்றும், இறை பணி நிற்றல் சமுதாயத்திற்கு அவசியம் என்றும் பிள்ளை லோகாச்சாரியார் வலியுறுத்துகிறார். -

உள்பொருள் (தத்துவம்) நன்மை(ஹிதம்) புருஷார்த் தம் அல்லது குறிக்கோள் என்ற தலைப்புக்களில் உப நிடதங்களில் விளக்கிய முறையைப் பின்பற்றியே விசிஷ்டாத்வைதம் இங்கு விளக்கப்பெறுகிறது. உபநிடத் தில் "பிரமத்தை அறிபவன் உயரிய நிலையை அடை வான்” என்றும் உள்பொருள் அல்லது தத்துவத்தின்