பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 129

வேதத்தின் பிற் பகுதியாகிய உத்தரகாண்டம், பிரமத்தின் பிரமத்தின் குணயமாகிய ஞானத்தை விரிக்கிறது. இவ்வாறு, வேதத்தின் பகுதிகள் ஒவ்வொரு குணத் தினைச் சிறக்கப் பேசக் காண்கிறோம். கீதையும், பாகவதமும் ஒருங்கே பிரமத்தின் அனைத்தியல்புகளையும் நமக்கு முழுமையாகச் சித்தரிக்கின்றன.

    அக்ஷரப்பிரமம்: வல்லபர் பிரமத்தின் மூவகை வடிவங்களை ஏற்கிறார். (1) பரப்பிரமம் அல்லது புருஷோத்தமன்; (2) அந்தர்யாமி, (3) அக்ஷரப்பிரமம். கிருஷ்ணன் அல்லது புருஷோத்தமன், பரம்பொருளாகும்.
   இனிமை, ஆனந்தம் ஆகியவற்றின் நிறைவு நிலையே பிரமம் ஆகும். புருஷோத்தமனாக யாவருடைய அன்பிற்கும் வழிபாட்டிற்கும், பிரமம் உரியதாகிறது. புருஷோத்த மனின் ஆனந்தம் எல்லையற்றது. உண்மையிலே, ஆனந்தத்தின் பகுப்பற்ற முழுமையான ஒரு திரட்சியாகப் பிரமம் விள்ங்குகிறது. அனைத்துயிருள்ளும் அந்தர்யா மியாகப் பிரமம் உறைகிறது. அனைத்துயிருள்ளும் உள்ளிருந்து பிரமம் இயக்குகிறது. அந்தர்யாமியாகப் பிரமம் விளங்குகிறபொழுது எல்லைக்குட்படும்.இன்பத் தையே உடையதாகிறது. அக்ஷரப்பிரமமாகும். (அத்யாத் மிகம்) பிரப்பிரமம் ஞானிகளால் உபாசனைக் குரிய தாகக் கருதப்பெறுகிறது.
    ஞானிகள், உபாசனையின் முடிவு நிலையில் பரப்பிரம்மத்தோடு ஒன்றிவிடுகின்றனர். பரப்பிரமத்தைப் பக்தர்கள் கிருஷ்ணனின் உறைவிடமாகவும், திருவடி யாகவும் கொள்கின்றனர். (இந்நிலையில், கிருஷ்ண பகவான் சரணன் என்றும், பரந்தாமன் என்றும், வியோமன் என்றும் விவரிக்கப்பெறுகின் றனான்). நெருப்பினின்று தோன்றுகின்ற பொறிகள் போல அக்ஷரப்பிரமத்தினின்று ஆன்மாக்கள் தோன்றுகின்றன.
    இறைவன் ஞானத்தின் மூலமாக விடுதலை அருள விரும்புகின்றபோது, அகூடிரப்பிரமத்தை நால்வகை