பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 த கோவேந்தன்

வடிவங்களைக் கொள்ளச் செய்கிறான். (1) அகரம், (2) காலம், (3) செயல் அல்லது கருமம், (4) இயல்பு (சுபாவம்). பின்னர் அகூடிர வடிவம் பிரகிருதியாகவும், புருஷனாகவும் தோன்றி அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாகிறது. மேலே குறித்த நால்வகை வடிவங்களும் என்றென்றும் உள்ள தத்துவங்கள் எனக் குறிக்கப் பெறுதலோடு, அத்தத்துவங்கள் இறைவனோடு, ஒன்றி யிருப்பதாகக் கருதப் பெறுகிறது.

    அக்ஷரப்பிரமத்தின் ஆனந்தம், இறைவனின் உள்ள உறுதியினால் படைப்புக் காலத்தில் மறைவுறுகிறது. இந்நிலையில் அக்ஷரப்பிரமன் முக்கிய ஜீவன் எனப்படும். 'ஆதுலோமி’ என்போர் படைப்புக் காலத்தில் அறிவுடைய ஆன்மா, அறிவுடைய பிரமத்தில் ஒன்றிவிடுவதாகக் கூறுகிறார். அகூடிரப்பிரமன் குறித்துக் கூறப்பெறுகிற வல்லபரது கருத்தும் 'ஆதுலோமி கருத்தும் ஏற்கும் வகையில் ஒப்பிடப்படலாம். அக்ஷரப்பிரமம் முக்கிய ஜீவன் என்கிற நிலையிலே, ஆன்மாக்களுக்கு எல்லாம் உயர்ந்ததாகும். உண்மையிலே, அக்ஷரப்பிரமம் எல்லைக் குட்பட்ட இன்பத்தை உடையது. இறைவனது புருஷ வடிவங்கள் ஏற்கிறது. இறவனது. உள்ள உறுதி உருக்கொள்ளுகிறபொழுது பிரகிருதி எனப்படும். பிரகிருதியைவும், புருஷனையும் கடந்து விளங்குவது அக்ஷரப்பிரமமாகும்.
    அரப்பிரமத்துள் எண்ணிறந்த உலகங்கள் அடங்கியுள்ளன. உபநிடதங்களிலும் கீதையிலும் பிரமம் 'அவ்வியக்தம்’ எனக் குறிக்கப்படுகிறது. பிரமத்தை எதிர்மறை நிலையில் விவரித்தால் அக்ஷரப்பிரமத்தையே பெரிதும் குறிக்கும். அக்ஷரப்பிரமம் பிரமத்தின் எதிர்மறை விளக்கத்தால் குறிக்கப்பெறுவதாகும். அக்ஷரப்பிரமம் புருஷோத்தமனுக்குத் தாழ்ந்த நிலையே உடையது. இது சங்கரரது பரப்பிரமத்தைப் போன்றது. இந்திய மெய்ப்பொருளியலுள் மறக்கப்பெற்ற அல்லது பேசப் பெறாத கருத்துணர்வு அஷரப்பிரமமாகப் பேசப்