பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 131

பெறுகிறது. ஆதலால், இவ்வாறு அக்ஷரப்பிரமத்தைக் கருதுவதன் பெருமை வல்லபர்க்கே உரியதாகும்.

    உலகு: கடவுள் துணையின்றி தனியனாய் இருத்த லால் பலராக விளங்க விரும்பினார். உலகத்தை மகிழ்ச்சிக்காகவே படைக்க இறைவன் விரும்பினார். தனது ஆன்மாவினின்று 

தன் விருப்பத்தினாலேயே பிரபஞ்சத்தைப் படைக்கிறார். சிலந்தி, தன்னிடத்து ஊறுகின்ற பொருளைக் கொண்டே கூட்டினை அமைப்பதுபோலக் கடவுள் பிரபஞ்சத்தை அமைக்கிறார். பிரமத்தின் சுய ரூபத்தினின்று பிரபஞ்சம் தோன்றுகிறது. பிரமத்தின் ஆற்றலினின்றோ உடலினின்றோ, மாயையினின்றோ தோன்றவில்லை.

   சங்கரர், இராமானுஜர், நிம்பார்க்கர் ஆகியோர் வகுத்துள்ள கருத்து முறைகளுள் பிரபஞ்சம் பிரமத்தின் மாயையிலிருந்தும், உடலிலிருந்தும், ஆற்றலிலிருந்தும் தோன்றியதாகக் கொள்கின்றனர். பிரமத்தின் சுய ரூபம் மாற்றமுறுகிறது அல்லது பரிணாமுறுகிறது என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கின்றவர்களுள் வல்லபர் வேத நூல்களின் கருத்துகளைச் சிறிதும் பிறழ்வின்றிப் பின்பற்றுகின்றார். 
   ஆதலால், இறைவன் பிரபஞ்சத்தின் முதற் காரணமாகவும், நிமித்த காரணமாகவும் விளங்குகிறார். பிரபஞ்சமாகப் பிரமம் மாறுகின்ற நிலையில் மாற்றத்திற்கு உட்படினும் எவ்விதத் திரிபிற்கும் தான் உட்படுவது இல்லை. இத்தகைய மாற்றத்தை அவிக்ருத பரிணாமம் என்று கூறுவார்கள். இக்கருத்து அளவை இயலுக்குப் பொருந்தாது.
    ஆயினும், சுருதியின் உண்மைகட்கு ஒத்துவருவதால் ஏற்புடையதாகும். மேலும், வல்லபர்க்குச் சுருதியே முடிவான தலைமையுடையததாகும். சுருதி, பிரமம், பிரபஞ்சமாக மாறினும் எவ்வித மாற்றத்திற்கும் பிரமம் உட்படுவது இல்லை என்ற கருத்தினை வற்புறுத்துவதால்,