பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 த கோவேந்தன்

    வித்தை, ஐவகை வடிவங்களை உடையது. (1) துறவு, (வைராக்கியம்), (2) அறிவு: (சாங்கியம்), (3) மனநெறி; (யோகம்) (4) தவம்: (5) கேசவனிடத்தில் ஈடுபாடு;
    அவித்தைக்கும் ஐவகை வடிவங்கள் உண்டு (1) தன்னைப் பற்றிய அறிவின்மை; (அறியாமை) (2) அகக்கருவிகள்; (3) பிராணன் (உயிர்ப்பு), (4) புலன்கள்; (5) உடல்; ஆன்மாவின் அவித்தையை வித்தை அறவே நீக்குகின்ற போது அவித்தையின் படைப்பாகிய சம்சாரமும் தானே அழிகின்றது. அழிந்த பிறகு ஆன்மா, விடுதலையடைகின்றது.
    இப்பிரபஞ்சம் (ஜகத்) வித்தையால் அழிவுறுவ தில்லை. பிரமத்திடத்து ஒன்றிவிடுகின்றது. பிரமம் படைப்பு அனைத்தையும் ஒடுக்கக் கருதுகின்றபோது பிரபஞ்சம் நீங்குகிறது. பிரமம், தன்னுள்ளேயே ஆனந்தம் அடைய விரும்புகிறபொழுது படைப்பு முழுமையையும் தன்னுள்ளே ஒடுக்கிக்கொள்ள விரும்புகிறது.ஜகத் என்று குறிக்கப்பெறுகின்ற உலகிற்கு சம்சாரம் என்று குறிக்கப் பெறுகின்ற உலகிற்கும் இடையே உள்ள வேறுபாடானது வல்லபரால், சிறப்பாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும். இவ்வேறுபாட்டினால், வல்லபர் சுத்தாத்வைதக் கொள்கையினை நிறுவுவதற்கு இயல்கின்றது. வல்லபர் சுத்தாத் வைதக் கொள்கையை நிறுவுவதற்கு வெற்றி கண்டவர் ஆவர். பிரபஞ்சப் படைப்பு முறைகள் பலவாகும். இறைவனின் உளப்பாங்கிற்கும் ஏற்பப் படைப்புகள் பலதரப்படும்.
    ஆன்மா: பிரபஞ்சப் படைப்பின்போது ஆன்மாக்கள், இறைவனிடமிருந்து அல்லது அக்ஷரப் பிரமத்திட மிருந்து நெருப்பினின்று பொறிகள் தோன்றுவதுபோல வெளிப்படுகின்றன. ஆன்மாக்கள், பலவாகும். என்றென்றும் உள்ளவை, அணுத்தன்மையுடையவை. பிரமத்தின் பகுதிகள் ஆகும். ஆன்மாக்கள், நுகர்க்கின்ற திறன் உடையவை.இறைவனது விருப்பத்திற்கு ஏற்ப இன்பத்தின்