பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

                          139

பற்றிய ஞானத்தையும் உடையோர்களும் விடுதலை யடைகின்றபோது தெய்வீக இன்பத்தை விடுதலையாகப் பெற்று நுகர்வார்கள். மாரியாத மார்க்கத்தில் ஆன்மீக வாழ்வு, கடவுள் வழியில் செல்ல நேர்வதால், விடுதலையானது படிப்படியேநிகழ்வதாகும்.இவர்கள் உடனடியாக விடுதலை அடைவது என்பது இறைவனின் இன்னரு ளாலேயேநிகழ்வதாகும்.இறைவனைப் பற்றிய ஞானத்தை உடையவர்கள். இறைவனது இருப்பை அல்லது இறை உண்மையை உள்உணர்வினாலே உணர்வோர் ஆவர். இவ்வாறு, இறை உண்மையை உள் உணர்வினாலே தெளிந்தவர்கள் தம் வாழ்நாள் முழுமையும் இறைவனையே தியானிப்பதில் கழிக்கின்றனர். இவர்கள் கடவுள் நெறியிலே சென்று அக்ஷரப்பிரமத்துள் ஒன்றுகின்றனர். இவர்கள் ஒன்று கின்ற அக்ஷரப்பிரமம் இவர்களது ஞானத்தின் பொருளாகும். இவர்கள் உள்பொருள்களுள் அக்ஷரப்பிரமத்தை உயரியதாகக் கொள்கின்றனர். புருஷோத் தமன் அல்லது தலைசிறந்த நிலையிலுள்ளவர் போன்றவர்களை இவர்கள் அறியமாட்டார்கள். இவ்வாறு பிரம அறிவைப் பெற்றவர்கள் கிருஷ்ணனை வழிபடுவோ ரானால், இவர்களை வெல்லுபவர்கள் யாரும் இலர். இறைவனை வழிபடுவோருள் கற்றறிந்தோராகிய இவர்கள், வாழ்வின் முடிவிலே இறைவனோடு ஒன்றி விடுகின்றனர். இறை வழிபாடு வெவ்வேறு வடிவங்களை உடையது. இவ்வகைகள் ஒன்பது. (1) இறைவனது புகழைக் கேட்டல் (2) புகழ்ப்பாடல்களை ஓதுதல் (3) நினைத்தல் (4) தொழுதல் (5) வழிபாடு (6) வணக்கம் (7) தொண்டு (8) நட்பு (9) தன்னையே அர்ப்பணித்தல் என்பனவாகும். இங்குக் குறிக்கப்பெற்ற நிலைகள் மேலேறுகின்ற வரிசையில் அமைந்துள்ளன. வழிபடு வோன், படிப்படியே முன்னேறிச் சென்று இறைவன் பக்தியைப் பெறுகிறான்.