பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

                        143

ஆன்மீக வறுமையையும், சார்ந்து வாழ வேண்டிய நிலையையும் உணர்கிறானோஅவனே,இறைவனிடத்தில் சரண் புகுகிறான். மிகுந்த நிலையில் கடன்பட்டிருக்கின்ற அறம் கூறும் அவயத்தைச் சார்ந்து தான் கடன்பட்டிருக்கின்றோரினின்றும் தன்னைக் காக்க வேண்டும் என்று முறையிடுகின்றான். கடன்பட்டவன் நிலையில் புஷ்டி பக்தன் உள்ளான். இறைவனது திருவடியிலே தன்னை முற்றிலும் ஒப்படைத்துக் கொண்டு, தன்னைமட்டுமின்றித்' தனது உறவினர்கள் அனைவரையும் இறைவனுக்கே உரிமையாக்கி விடுகின்றான். இறைபணி நிற்றலிலேயே தனது வாழ்வு முழுமையும் ஒப்புவித்து வாழ்கின்றான். இறைவனது புகழைப் பரவும் பாகவத்தைப் பயிலுகின்றான். உலகத் தொடர்புகள் உளவேல், அவற்றைச் சுருக்கிக் கொள்கின்றான்.ஒருவன். தன்னை முற்றிலும் இறைவனிடத்து ஒப்படைத்துக் கொள்வான் எனில், அவனிடத்தில் சுயநலத்திற்கு ஏதும் வாய்ப்பு இல்லை. உலகப்பொருள்கள் இடத்தும் பற்று ஏற்படுவதற்குக் காரணம் இல்லை. பக்தனது சம்சார வாழ்க்கை தானே நீங்குகிறது.இவ்வாறு தன்னை இறைவனிடத்து முற்றிலும் ஒப்புவித்துப் பற்றுக்கள் ஏதும் இன்றி வாழ்வான் ஒருவனது இல்லம், இறைவன் உறையும் இடமாக அமைகின்றது. பக்தனது குடும்பம் முழுமையும் தெய்வீக இன்பத்தை இம்மையிலேயே துய்க்கிறது. புஷ்டி பக்தன் இறைவனைப் பேரன்போடு வழிபடுகின்ற காரணத்தால் தன் இம்மை இன்பங்கள் அனைத்தையும் துறக்கின்றான். தான் பிறந்துள்ள வகுப்பிற்கும், மேற்கொண்டுள்ள நிலைக்கும் உரிய கடமைகளையும் மறந்து வழிபடுகின்றான். - இறைவனாகிய கிருஷ்ணன் ரஸமாவான், ஆனந்த வடிவினன், நிகரற்ற அழகாவான். வல்லபர் அழகியல் துறையிலே தனித்ததொரு மெய்ப்பொருளியலை வளர்க் கின்றார். பொதுவாக அனைத்து ரஸங்களுக்கும் கிருஷ்ணன் விளக்கமாக அமைகிறார். குறிப்பாகச்