பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 த. கோவேந்தன் சிருங்கார சரத்திற்குப் பெருவிளக்கமாவார். சிருங்காரத் தில் இரு கூறுகள் உண்டு.ஒன்று உறவு, மற்றொன்று பிரிவு. கிருஷ்ணன் தனது பக்தர்களோடு கொள்கின்ற உறவுகளிலே இந்த இருவகை நிலைகளையும் உணர்த்துகின்றார். பாகவதத்தில் கிருஷ்ணனது பிள்ளைப்பருவம் குறித்து அமைகின்ற விளக்கம் அனைத்தும் பெருவிருந்தாக அமைகிறது. பாகவதத்தில் இந்தப் பகுதிகளைப் படிக்கின்றவர்கள் தெய்வ நலத்தில் தோய்ந்து விடுகின்றார்கள்.கோகுலத்தில் கிருஷ்ணனது செயல்கள் அனைத்தும் மெய்ப்பொருள் உண்மைகளால் நிறைந் துள்ளன. இறைவனது அருளாற்றலின் வியத்தகு பயனை எல்லாம் நன்கு விளக்கமாகத் தருகிறது. இதனால் பாலகிருஷ்ண வழிபாடு வற்புறுத்தப்பெறுகிறது. கிருஷ்ணனது பேரழகிலே கோபிகள் ஈடுபட்டுத் தம் வயம் இழந்து கிருஷ்ணனையே அடையும் வேட்கை மீதுரப் பெறுவர். கிருஷ்ணனிடத்துக் கொண்டுள்ள பேரன்பிற்கு தமது உடைமையெல்லாம் அர்ப்பணித்து வாழ்வார்கள். கிருஷ்ணன் அருளிய ஒழுக்கக் கட்டளைகளையும் மறுக்கும் அளவுக்கு தமது நேர்மையினை மெய்ப்பித்தனர். இதனால் கிருஷ்ணனது தோழமையை இழந்தனர். தோழமையின் இழப்பு, கோபிகள் கொண்ட அகந்தையினால் நேர்ந்ததாகும். பின்னர் அகந்தையினால் நேர்ந்த பிரிவிற்கு நினைத்து பெருவருத்தத்தை உருக்கமான முறையில் புலப்படுத்தினர். இதனால் இறைவனது அருள் நலம் வாய்க்கப்பெற்ற கிருஷ்ணனது உறவினால் அமையும் இன்பத்தை நுகர்வோர் ஆயினர். கடவுளது, அருளினாலே, கோபிகள் கடவுளிடத்து அன்பு கொண்டு கடவுளை அடைவார் ஆயினர். எவன் ஒருவன், அன்பினால் வெகுளியால், அச்சத்தால், பற்றால்,