பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 த கோவேந்தன் அலலா. சங்கரா தாராத ஒரு சிறப்பினை ஈஸ்வரனுக்கு அல்லது இறைவனுக்குச் சைதான்யா தருவதைப் பார்க்கிறோம். ஈஸ்வரனைப் பிரஞ்வத்தினைப் படைப் போனாக, காப்போனாக, அழிப்போனாக, கருதும் ஒரு தாழந்த் நிலையையே சங்கரா தருகின்றார். நிர்குணப் பிரமததையே பரமபொருளாக முழுமுதற் பொருளாகக் கருதி அதற்கு அடுத்த நிலையையே சகுணப்பிரமத்திறகுச் சங்கரர் தருகின்றார்.

சைதன்யர்கள், பிரபஞ்ச உண்மையினை நம்புகின்ற வர்கள். இதை மாற்றி நிர்குணப் பிரமத்தை ஈஸ்வரனுக்கு அடுத்த நிலையில் வைத்துக் கருதுகின்றனர். பிரமத்தைப் படைப்புத் தலைவனாக, படைத்த உயிர்களோடு அன்பு உறவுகளை உணர்வது முழு உண்மையை உணர்வதாகும். இவ்வுண்மையை உணர்வின் படிநிலைகளில் நிலை பெறாத கூறாக அல்லது ஒரு படி நிலையாக நிர்குணப் பிரமத்தைச் சைதன்யர் கருதுகின்றனர்.
     கிருஷ்ணனை இறைவனாகவும், ராதையை அவனது ஆற்றலாகவும், சக்தியாகவும் சைதன்யர் கருதுவது அவருடைய இரண்டாவது கருத்தாகும். சைதன்யா, நிம்பார்கத் வல்லபர் ஆகியோர் இறைவனைக் கிருஷ்ணனாகவும் அவன் ஆற்றலை அல்லது சக்தியை ராதையாகவும் கருதுபவர். இவ்வாறு கருதுவதில் இராமானுஜர், மாத்வர் ஆகியோரினின்று வேறுபடுகின்ற வர்கள். இராமானுஜரும், மாத்வரும் இறைவனை விஷ்ணுவாகவும், நாராயணனாகவும் கருதுகின்றனர். இலட்சுமியை நாராயணனது வாழ்க்கைத் துணையாகவும் அல்லது ஆற்றலாகவும் கொள்கின்றனர்.இவர்கள் வைகுந்தத்தில் வாழ்பவர்கள் என்றும் இவர்கள் கருதுகின்றனர். கிறித்தவர்களுக்குச் சுவர்ககம்(Paradise) எப்படியோ அப்படி இவர்களுக்கு வைகுந்தம் அமைகிறது. இவ்விரு கருத்துக்களுக்கு உள்ளே வேறுபாடு அடிப்படையானதும், ஆழமானதும் ஆகும்.