பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 153 இறைவனையும, அவனது ஆற்றலையும் சேர்த்து இலட்சுமி நாராயணனாகக் கருதுவதும், வைகுந்தத்தில் ஆட்சி புரிவதும் வற்புறுத்தப் பெறுவது இறைவனது ஐஸ்வர்ய குணம் ஆகும். ஆதலின் அவனது திருவடியிலே 'வீழ்ந்து ஒருவன் வணங்கலாம. அல்லது மற்ற வழிகளில் வழிபடலாம. அவன் மாட்சிக்கும் பெருமைக்கும வணக்கம்செலுத்தலாம்.இவ்வழிபாடு அல்லது வணக்கம் தொலைவிலிருந்தே நிகழ்வதாகும். நெருங்கி நின்று வாழ்வில் உறவு கொள்ளும் துணிவு எவருக்கும் ஏற்படுவது இல்லை. இராதாகிருஷ்ணனாகக் கருதுவதில் இது முற்றிலும் மாறுபடுவது. இங்கு இறைவனது தோழமையைப் பிருந்தாவன லீலையிலே, நெருங்கிய மனித சமூக உறவிலே, தோழனாக, குழந்தையாக, நாயகனாக வெவ் வேறு உறவு நிலைகளிலே நுகரலாம். இறைவனை, மாதுர்ய ரூபத்தை அல்லது இறைவனது தோழமையின் இனிமையை உணர்வது இந்நெறியாகும். சைதன்யர்,வல்லபர் ஆகியோர் லட்சுமி நாராயணன் பெருமையை வணங்குவதைவிட இறைவனது இனி மையை நுகர்வதை உயர்ந்ததாக, இனிமையுடையதாகக் கருதுகின்றனர். இறைவனை லட்சுமி நாராயணனாகக் கருதுவதில் இறைவனின் பெருமையும், புகழுமே ஒருங்கே வலியுறுத்தப்பெறுகின்றன.

   சித்தாந்த இரத்தினம் என்னும்  நூலிலே மாதுர்ய ரூபம் என்பது நன்கு விரிக்கப் பெறுகிறது. இறைவனின் மனித வடிவிலே மனிதர்கள் இடையே, மனித்குறைகளோடு (குறைகளைக் கடக்காமல்) தோன்றுகிறார். இவ்வாறு மனிதரிடையே மனித வடிவில் தோன்றுவது ஐஸ்வரிய ரூபத்தினின்றும் வேறுபடுவது. ஐஸ்வர்ய ரூபத்தில், இறைவனின் மனித நிலையைக் கடந்த உயர்ந்த நிலையில், பெரும் புகழும் ஆற்றலும் உடையவராய்