பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 த கோவேந்தன் விளங்குகிறார். துவாரகையில் பெருமான் நான்கு கையோடு தோன்றுவது இங்கு கருதத் தக்கது.

  மனித வடிவமும், ஐஸ்வரிய ரூபத்தில் பக்தி அச்சமாக, பணிவன்பாக, கீழ்படிதலாக உருக் கொளகிறது. மனித வடிவில் உள்ள இறைனை வழி படுகின்றபோது பக்தி நெருங்கிய தோழமையாக, அன்பாக, பற்றாக விளங்குகிறது.

ஏற்புடைய அறிவைத் தரும்,வாயில்கள்

  தக மூல சுலோகத்தில் உள்ள பத்து சுலோகங்களுள் முதல் சுலோகம் பிரமாணம் அல்லது பொருந்தும் அறிவின் வாயில் குறித்த கேள்வியினை எழுப்புகிறது. ஏனைய ஒன்பது சுலோகங்களும் அறிவினால் அல்லது பல்வேறு வாயில்களால் அறியப்பெறும் பொருள்களின் தன்மையை ஆய்கின்றன. முதல் சுலோகத்தின்படி வேதங்கள் அறிவு பெறுதற்கு உண்மையான வாயில்களாகும்.
  காட்சி, வழியளவை, பிற பிரமாணங்கள் அல்லது அறிவைத தருகின்ற பிற வாயில்கள் ஆகியவை வேதங் களின் அடிப்படையான கருத்துக்களோடு பொருந்துவன. உள்பொருளின் இயல்பையும்,வேதக் கருத்துக்கட்குமாறு காணாத வகையில் பொருந்தவே விளக்குவனவாக வாயில்கள் அமையுமானால் அவை ஏற்க்கத்தககன.தனி அளவை மட்டும் முழுமுதற்பொருளின் இயல்பினை வரையறை செய்வதற்குத் தகுதியற்றது. வழக்குலைகள் வேதபோதனைகளை அடிப்படையாகக் கொண்டு வேத உண்மைகளை விளக்குவதற்கு முற்பட்டால் ஆன்மீகத் துறையில் உள்பொருளை விளக்குகின்ற வாய்ப்புடை யாகக் கொண்டு வேத உண்மைகளை விளக்குவதற்கு வாய்ப்புடையதாகும்.
 உள் பொருள் ஆன்மீகமாக அமையமானால் அறிவு நிலையிலே சாதாரணமாக உள்ள எல்லைகளைக்