பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 155 கடக்கின்ற தன்மையுடையதாகும். சாதாரணமாக நிகழும் சிந்தனைக் காட்சியின் அடியாக எழுவதாகும். எவ்வெப் பொருள்கள் காலத்தாலும், இடத்தாலும் கட்டுறுகின்றனவோ, அவ்வப்பொருள்களை அறிதற்குத் துணையாக இருப்பன பொறி, புலனகளாகும.

  புலன்கள் தருகின்ற காட்சியை அடிப்படையாகக் கொண்டு சிந்தனை அமைகிறது. காட்சியும், அளவை நெறியில் இயங்கும் சிந்தனையும் புலப்பொருள்கள் உலகிலும், பொருளியல் உலகிலும் இயல்பில் நிகழ்வன. ஆன்மீக நெறியிலே உள்பொருளைப் பற்றி ஆராய வேண்டுமானால் காலமும், இடமும் கடந்ததொரு காட்சியைப் பெறவேண்டியதாகிறது. சாதாரண புலப் பொருள்கள் காலத்தாலும், இடத்தாலும் கட்டுறுவன: எளிய காட்சிக்கும், சாதரண சிந்தனைக்கும் கடந்ததோர் உயரிய அனுபவ நெறி ஒன்றே ஆன்மீக நெறியில் துணையாகும்.இத்தகைய உயரிய காட்சி அறிவோர்க்கும், துறவோர்க்கும் அமைவதாகக் கருதப்பெறுகிறது. ஆதலால் முழுமுதற் பொருளின் உண்மை நிலையை வரையறை செய்ய வேதங்களே நமக்கு உண்மையான வழிகாட்டியாகும். அறிவோரும். துறவோரும், அனுபூதியாகிய உயர் நெறியிலே உணர்ந்த உணர்வுகளின் பதிவுகளே வேதங்கள் ஆகும்.

முழுமுதற் பொருள்

  பிரமேயங்கள் அல்லது முடிவாக அறியத்தக்க பொருள்கள் குறித்து வேதங்கள் தருகின்ற செய்திகள் யாவை? சைதன்யர் அவரைப் பின்பற்றுவோர் கருத்துப்படி முழுமுதற்பொருள் குறித்து வேதங்கள் போதிப்பது வருமாறு! ஹரி என்பவர் முழுமுதற் பொருள் ஆவார். ஹரி என்பவர் பகவான் அல்லது தலைவர் ஆவார்.ஹரியின் பொருட்சார்பற்ற உருவத்தைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டம் (அங்ககாநதி), சங்கரது எல்லை அற்ற நிர்க்குணப் பிரமம் ஆகும்.