பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 த. கோவேந்தன் ஹரியின் ஒரு கூறே பரமாதமன் அல்லது உயாவற உயர்ந்த ஆன்மாவாகும். படைக்கப்பெற்ற பிரபஞ்சத்துள் அகனமர்ந்த ஆன்மாவாக ஹரி அமைகிறது. ஹரி முழுமையாகும்; பரமாத்மன் ஹரியின் கூறு ஆகும். அல்லது அம்சம் ஆகும். ஹரி நடுநாயகமாக விளங்கும் உளபொருள் ஆகும். அவரைச் சூழந்து அமையும் ஒளி வட்டமோ நிர் விசேஷ அல்லது நிர்க்குண பிரம்மாகும். நிறைந்த அழகு நிறைந்த மாட்சி, நிறைந்த ஆற்றல், நிறைந்த புகழ், நிறைந்த அறிவு, அல்லது நிறைந்த ஞானம், முழுத் துறவு ஆகியவற்றின் ஒருமைப்பாடே ஹரியாகும். மேற்குறித்த அறுவகைப் பண்புகளின் நிறைவான நிலையே உருக்கொண்டது போல ஹரி அமைகிறார். மேற்குறித்த பண்புகள் யாவும் ஒத்த தகுதியுடையன அல்ல. இவை தம்முள் உறவு உடையன, ஆனால் சில முதன்மை யானவாகவும், வேறு சில துணை நிலையினவாகவும் அமைகின்றன. ஸ்ரீ அல்லது நிறைந்த அழகு, பண்புகள் அனைத்திற்கும் அடிநிலையில் உளதாகும். நிறைந்த அழகு முதன்மையானது, முக்கியமானது, தலைமையுடையது. மாட்சி, ஆற்றல், புகழ் ஆகிய பண்புகளை நிறையழகிற்குத் துணை நிற்பனவாகும். ஞானம், துறவு இறைவனிடத்து விளங்குகின்ற போது அவை இறைவனது புகழின் விளக்கமாக அமைகின்றன. ஞானமும் துறவும் சங்கரரால் வற்புறுத்தப் பெறுகின்ற இரு பண்புகள் ஆகும். இவ்விரு பண்புகளும் துணை நிலையில் உள்ள பண்புகளின் அடியாகத் தோன்றுவனவாகும். ஆதலால், இறைவனது உருவத்தைச் சூழ்ந்து ஒளிவட்டமாக அமைகின்றன. ஞானமும் - துறவும் சங்கரரது நிர்க்குணப் பிரமத்தின் சிறந்த இயல்புகளாவன. பிரம்ம இவ்வாறு கருதப் பெறுமேல் தனித்த நிலையில் உள்பொருளாகக் கருதுவதற்கு இல்லை. ஹரியின் பண்புகளில் ஒரு கூறாக