பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 த. கோவேந்தன் வெளிப்படுகின்றது. இவ்வாறு, வெளிப்படுவனவற்றுள் இறைவனது கடந்த நிலை முற்றிலும் வெளிப்படுவது இல்லை. அளவை இயலில் விளங்கம மொழிகளின் துணையைக் கொண்டு இறைவன் தனது பல்வேறு வெளிப்பாடுகளில் செலுத்தும் ஆற்றல்களைப் புரிந்து கொள்ள இயலாது. பரம்பொருள் என்ற நிலையில் இறைவன் தான் செலுத்தும் ஆற்றல்கள் யாவும் சுயரூப சக்தி கொள்ளும் வெவ்வேறு வடிவங்கள் ஆகும். பரம்பொருளின் மிகவும் இன்றியமையாத சுயரூப சக்தியானது மூன்று வகையான சித்சக்தியாக வெளிப்படுகின்றது. ஒளிபெறச்செய்தலும்,அறிவுதரும் ஆற்றலாக வெளிப்படுகின்றது. அது ஜீவ சக்தியாக அல்லது எல்லைக்குட்பட்ட ஆன்மாக்களாக, தான் தன்னையே பகுத்துக்கொள்ளும் அல்லது தன்னைத்தான் பெருக்கிக் கொள்ளும் ஆற்றலாக வெளிப்படுகின்றது; அது மாயா சக்தியாக அல்லது இறைவன் பருப்பொருள்களாக உருக்கொண்டு வெளிப்படுகின்றது. உயிரியல் உலகில் பல பொருள்களாகவும், அறிவற்ற நிலையாகவும் அமைவதற்குக் காரணமான ஆற்றலாக வெளிப்படுகின்றது. இறைவனது சுயரூபம் உள் அமைவிலேயே ஆன்மீக இயல்புடையது. இவ்வியல்புடைய இறைவன் எவ்வாறு பருமை உலகிலே அறிவற்ற நிலையில் தோன்றுதல் இயலும்? எல்லையில்லாத ஆன்மீக நிலையில் உள்ள உள்பொருள் எண்ணிறந்த எல்லைக்குட்படும் சிற்றுயிர்களாக எவ்வாறு பகுப்புக் கொள்ளுகின்றது? இவ்வாறு பகுப்புக் கொள்வது இறைவனது முழுத்தன்மைக்கு மாறாகாதா? பரம்பொருள் பகுப்புக் கொள்ளுதல் பல்வேறு உயிர்களாகப் பொருள்களாகத் தோன்றுதல், புரியாத