பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 த. கோவேந்தன் என்பார்கள். சங்கரரைப் பின்பற்றுவோர்க்குப் பிரமத்தின் உண்மைநிலை சத், சித், ஆனந்தம் என்கின்ற மூவகை இயல்புகளால் விளக்கமுறுகின்றது. தொடர்புடைய பண்புகள் பொய்த்தோற்ற முடையன். பிரமத்திற்குரியன அல்ல. சைதன்யரைப் பின்பற்றுவோர்க்கும், ஏனைய வைணவக் கருத்து முறைகளுக்கும் முற்றும் அனுபவ உலகம் பொய்த் தோற்றம் உடையதாகாது என்பர். பரம்பொருளை இருகூறுகட்கு உட்படுத்திச் சுயரூபம், தடஸ்த்தம் என்ற இருநிலைகளைக் கொள்வது சைதன்யர் முதலிய வைணவர் கட்கு ஏற்புடையதாகாது. உலகினை உண்மையென ஏற்கிறபோது பிரமத்தைப் பாகுபடுத்தி அறிய வேண்டிய நிலையில் உள்ளது. தடஸ்த்தம் அல்லது தொடர்பு உடைய பண்புகள் சொரூபம் கொள்ளும் வெளிப்பாட்டின் வெவ்வேறு கூறுகளேயாகும். சைதன்யருக்கும், அவரது கருத்து முறைக்கும், சித் சக்தி, ஜீவ சக்தி, மாயா சக்தி ஆகியவை பொய்த்தோற்றங்கள் அல்ல; பிரமத்தோடு பற்றின்றி அமைவன அல்ல. பொய்த்தோற்றங்கள் எனக் கொள்பவர்கள் சங்கரைப் பின்பற்றுவோர் ஆவர். இறைவனது சுயரூப சக்தினி ஹிலாதினி என்ற நிலையில் தன்னுள் இன்புறுவதாகவும், சந்தீநீ என்ற நிலையில் தன்னை உணர்வதாகவும், தன் உண்மை உடையதாகவும், சம்வித் என்ற நிலையில் தன்னை அறிவதாகவும் விளங்குவதே வெவ்வேறு வெளிப் பாடுகள் ஆகும். சித் சக்தி என்பது யாது? அதன் இயல்பு யாது? இறைவனது முக்கிய நிலையின் ஆற்றலாகச் சக்தி விளங்குகிறபோது அதன் இயல்பு யாது? இறைவனது சுயரூபம் சக்தி ஆனந்தம் என்ற மூவகை நிலையில்