பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 163 விளங்குகிறபோது அதன் இயல்பு யாது? சித் அல்லது அறிவு என்பது இறைவனது ஆற்றல் ஆகும். இவ்வாற்றலின் துணைக்கொண்டு இறைவன் தனது சுயரூபத்தை உணர்கிறான். இறைவனது சுயரூபமாவது இருமையுள் ஒருமையாக விளங்கும் ஆன்மீக நிலையேயாகும். இறைவனது ஆற்றல் அதாவது கிருஷ்ணனுக்கும் ராதைக்கும் உள்ள உறவு ஆகும். கிருஷ்ணனாகவும், ராதையாகவும் இருவேறு நிலைகளிலே விளங்கினாலும் ஒருமை உணர்வு உண்டு. கிருஷ்ணன் ராதையாகவும், ராதை கிருஷ்ணனாகவும் வேறுபாடின்றி விளங்கினும் கிருஷ்ணனையும், ராதையையும் பிரித்து உணர்தல் இயலும். ஹிலாதினி என்ற நிலையில் உணர்வானது ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே அமையும் அன்பினை உணர்தல் ஆகும்.(கிருஷ்ணன் ராதையிடத்துக் கொள்ளும் அன்பையும், ராதை கிருஷ்ணனிடத்துக் கொள்ளும் அன்பையும் ஒருங்கே உணர்த்துவது. சந்திநீ என்கின்ற நிலையில் இறைவனது ஆற்றல் இப்பரு உலகாக விளங்குகிறது.இதனை விருந்தாவினம் என்பர். சம்வித் என்கின்ற நிலையில் இருமை இடையே அமையும் ஒருமையை நுகர்தலால் உறுகின்ற இன்பமாகும். சித் சக்தியை, அந்தரங்க சக்தி என்று வழங்குவதும் உண்டு. மையத்தை நாடி ஒருமையுறச்செய்யும் ஆற்றலாக சித் சக்தி பிரபஞ்ச முழுமையும், முழுமையான ஒன்றாக யாவும் ஒன்றிய ஒன்றாக உள்நோக்குவதாக அறியப் பெறுகிறது. முழுமையின் ஒவ்வொரு கூறும் முழுமை யதாகவே, அறியப் பெறுகிறது. பரம்பொருளின் உண்மை நிலையில் வைத்து ஒவ்வொரு பொருளும் அறியப் பெறுகிறது.