பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 த. கோவேந்தன் அந்தரங்க ஆற்றல் என்பது பலவற்றை ஒன்றாகவும், ஒன்றைப் பலவாகவும் உள்உணர்வினாலே தெளிதல் எனக் குறிக்கலாம். ஆன்மாவை ஆன்மீக ஒருமையாக, நிலை பெற்றுள்ள வேறுபாடுகளை யெல்லாம் நீக்கி, புற நிலையில் பிரிவுறுவனயாவும், அக ஆன்மீக உறவு களாகவும். சித் சக்தி, மாயா சக்திக்கு நேர் மாறானதாகும். எனினும் மாயா சக்தி இறைவனின் சொரூபசக்தி கொள்கின்ற வடிவமேயாகும். சித் சக்தி இறைவனின் பரம்பொருள் தன்மையை விளக்குகிறது. இந்நிலையில் யாவற்றையும் உட்படுத்தும் ஆன்மீக ஒருமையாக விளங்குகிறது. உள்ளனயாவும் ஒருமையுற்று விளங்குகின்ற ஒர் காட்சியினைத் தருவது சித் சக்தியாகும்.சொருப சக்தி சித் சக்தியாக ஒருமைக் காட்சியை வழங்குகிறது. சொரூப சக்தி மாயா சக்தியாக விளங்குகிறபொழுது இறைவனைப் பருமை உலகின் அறிவற்ற நிலையாக வெளிப்படுத்துகிறது. பருமை உலகின் அறிவற்ற நிலையாக வெளிப்படுத்துகிறது. பருமை உலகு அனுத் தன்மையுடை யதாக விளங்குவதும், புலப்பண்புகள் உடையதாலும் இறைவனாலேயே ஆகும். மாயா சக்தியை இறைவனது பகிரங்க சக்தி என விவரிக்கப்பெறுகிறது.இது விரைந்து செல்லும் ஆற்றலாகவும் குறிக்கப்பெறுகிறது. இறைவ னிடத்துத்தானே பிரிவுறுகின்ற சக்தியாகவும், அயலா கின்ற சக்தியாகவும் மாயா சக்தி அமைகிறது. ஆன்மீக ஆற்றல் பருமை உலகிலே அறிவற்றதாக விளங்குதற்கும், மாயா சக்தியே காரணம், முழுமையுற்ற கூறு, அணுத்தன்மை அடைவதாலே பன்மையும், தனிமையும் உறுகின்றது.இவ்வாறு பல்குதற்குக் காரணம் மாயா சக்தியேயாகும். சித் சக்தியினுள் இறைவனது சொரூபமானது ஆன்மீக ஒருமையாக யாவற்றையும்