பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 165 இணைத்தும்,வேறுபாடுகளைக் கடந்தும் விளங்குகின்றது. இது, இறைவனது உள்ளார்ந்த இயல்பாகும். மாயா சக்தியினுள் சித் சக்தியின் எதிர் நிலையைக் காணலாம்.தொகையான முழுமையான நிலைமுற்றிலும் மாறி, பகுப்பும், தனிமையும் உறுகிறது. சித் சக்தி உண்மையினை முழு வடிவிலே சிறிதும் மாறுபாடின்றி வழங்குகிறது.மாயா சக்தி இதனை மாற்றிப்பிரிவையும், பகுப்பையும் தருகிறது. இது உண்மை வடிவத்தின் தலைகீழான சாயலேயாகும். மாயா சக்தியினால் தனிமை உறுவன, உள்ளவாறு தோன்றுதல் இல்லை; முழுமையுள் அடங்குவதாகத் தோன்றுவது இல்லை; பகுப்பற்றுள்ள ஒவ்வொரு பகுப்பும் : பண்புகளை உடைய முழுமை போன்றதாகிச் சிறப்புடையதாக விளங்குகின்றது. சித் சக்தி, பொருள் சார்பற்ற ஆன்மீக நிலையுள்ள உள்பொருள் என, பரம்பொருளை அறிகிறது. மாயா சக்தி உயிரற்ற பருமை உலகிலே அறிவற்ற ஒன்றாகப் பரம்பொருளை வெளிப்படுத்துகிறது. பருமை உலகிலே உணர்வானது என்றென்றும் மாயாசக்தியால் . உறங்கியுள்ள நிலையில் வெளிப்படுகிறது. தனி ஆன்மா - ஜீவன் ஒருபுறம் இறைவனது சித் சக்தி உண்மையினை முழுவடிவிலே வழங்குகிறது. மறுபுறம் இறைவனது மாயாசக்தி, உண்மையினைச் சிதைத்து வழங்குகிறது. சித் சக்திக்கும், மாயா சக்திக்கும் இடையே ஜீவ சக்தி விளங்குகிறது. ஜீவ சக்தி என்பது பரம்பொருள் பல உயிர்களாக எல்லைக்குட்பட்ட நிலையில் விளங்குவதாகும். ஜீவ சக்தியானது மாறுபடுகின்ற இரு காட்சிகட்கு: உண்மைக்காட்சி, அவ்வுண்மையின் சிதைவுக் காட்சி களுக்கு இடையே இடம் பெறுகிறது.