பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 த.கோவேந்தன் ஜீவ சக்தி, இரு வேறு இயல்பு உடையதாகும். ஒன்று ஆன்மீக இயல்பு மற்றொன்று, ஆன்மீகச் சார்பு அற்றது. ஜீவ சக்தியைத் தடஸ்த்த சக்தி என்றும் கூறுவர். தடஸ்த்த சக்தி, இருவேறு நிலைகளைக் குறிப்பதாகும். ஒன்று, இம்மையைச் சார்ந்ததும் மற்றொன்று மறுமையைச் சார்ந்ததும், இம்மையையும், மறுமையையும் ஒருங்கே குறிப்பதாக ஜீவ சக்தி அமைவது.இவ்வுலகில் வாழ்பவன் எல்லைக்குட்பட்டவன்; ஆனால் எல்லைகடந்த நிலையை நாடுபவன். ஒரு ஆற்றின் கரையில் அமையும் நிலப்பகுதி ஆற்றையும் சேர்ந்து அடுத்துள்ள நிலப்பகுதியையும் சேர்ந்தது. இதுபோல, ஜீவன் இறைவனுக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் இடையே அமைந்து இரண்டையும் இணைப்பதாகும். இறைவன் தன் உண்மை நிலையிலே, யாவற்றையும் உட்படுத்தும் ஆன்மீக உண்மையாக விளங்குகிறார். புற நிலையில் சிதைவுற்றுத் தொடர்பற்ற பல தனிப் பொருளாலாய பருமை உலகிலே அறிவற்ற நிலையில் உள்ளவர் போல் தோன்றுகிறார்.இவ்வாறு இரு வேறு நிலைகளில் விளங்குகின்ற இறைவனை இணைப்பதே ஜீவன். இறைவன், ஜீவசக்தியாக தோன்றுகிறபோது தான் எண்ணிறந்த ஆன்மீக 'மொனாடுகள்டு'களாக விளங்கு கிறார். இவ்வாறு, பலவாகப் பெருகியுள்ள மொனாடுகள், இறைவனது சொரூபத்தோடு ஆன்ம நிலையோடு இணைந்துள்ளன.இவ்வாறு, பலவாகத் தோன்றுதலாலே பருமை உலகிலேயும், உள்ளார்ந்த நிலையில் இறைவன் தோன்றுவது வேண்டுவதாகின்றது. இறைவன் உண்மை நிலையிலே எல்லை கடந்ததாக, எங்கும் நிறைந்ததாக விளங்குகிறார். ஜீவனாக விளங்குகிறபொழுது எல்லைக்குட்படுகிறார். கட்டுறு கிறார்,மெளனமாகிறார். மாயா சக்தியின் மயக்குகளால் சிதைவுறுகின்ற நிலையில், உள்ளார்ந்த இறைவனது ஆன்மீக உண்மையோடு ஜீவன் கொள்ளுகின்ற