பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 த கோவேந்தன்

    ஜீவன், தான் இறைவனிடத்து இருந்து தோன்றிய பொறியென உணர்தல் வேண்டும். என்றென்றும், இறைவனது அணை வழி நிற்க வேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்.
    இம்மை நெறி, அல்லது தெய்வீகம் அல்லாத நெறி என்பது, ஜீவன் தனது போக்கிலே, தன்னையே வற்புறுத்திச் செல்லும் நெறியாகும். ஜீவன்தான் இறைவனுக்கு என்றென்றும், அடிமைப் பட்டுள்ளதை மறப்பதாகும். மறந்து தன்னைத் தனித்த நிலையில் பரம்பொருள் எனக் கருதிக் கொள்வதாகும். இவ்வாறு கருதுவது தனக்கெனச் சில வழிகள் உள எனக் கொள்வதாகும். இவ்வாறு தனது பொய்யான நிலையினை உணர்ந்து, அதனினின்றும் நீக்கிக்கொண்டு, உண்மை நிலையினை உணரத் தலைப்படுதல், ஆன்மீக ஒளியின் தோற்றமாகும்.
    ஆன்மீக ஒளி என்பது துன்பம், தோல்வி, ஏமாற்றம் ஆகியவற்றைத் தருகின்ற இவ்வுலகமாகிய பள்ளியின் வாயிலாகப் பிழையினை உணர்கிறது. தனது உண்மை. நிலையினை உணர்கின்ற விழிப்பினைப்பெறுகிறது. ஜீவன், தனக்கெனத் தனித்த நிலை என்பதையும், தான் தன்வயத்தனாகப் பரம்பொருள் நிலையில் இருப்பதாக எண்ணியது பிழையெனவும்.உணர்கிறது.
    இதற்குமாறாக ஜீவன், தான் இறைவனுக்கு என்றென்றும் தொழுபவனாகத் தொண்டாற்றக் 

கடமை உடையவன் என்பதை உணர்கிறது. பின்னர், ஏமாற்றத்திற்கும், தோல்விக்கும் காரணம்யாது எனச் சிந்தித்தல் நேர்கிறது. இச்சிந்தனையால் தோல்வியும், ஏமாற்றமும் ஜீவனைத் தனது எல்லைக்குட்பட்ட நிலையை அறியச் செய்கிறது. ஜீவன் பரம்பொருளாகிய முழுமையுள் அடிமை பூண்டுள்ள ஒன்றெனத் தன்னை உணர்கிறது. இவ்வுணர்வு ஜீவனது முழு வாழ்விலேயும் பரவுகிறது.