பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 173

ஆவர். இவர்கள் மாயா சக்தியின் மயக்குகளிலே கட்டுறாது வாழ்பவர்கள். பந்தத்துட்பட்ட ஜீவர்கள் இவ்வுலகை நோக்கியவர்கள் ஆவர். இவர்கள் மாயையின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். ஆதலால் மாயையினால் மயக்குண்டு சிதறுவர்.

    கட்டுண்ட ஜீவர்களிடத்து பக்தி ஒடுங்கியுள்ளது. வாழ்க்கையில் பல நுகர்வுகளின் வாயிலாகத் தம் தவறுகளை உணர்ந்து கடைசியாக ஆன்மீக நோக்கத்ததை நிறைவேற்றும் தெய்வ நெறியினைக் காண்கின்றனர். இதை எய்தும்போது இயல்பிலே உள் அமைந்த பக்தி, தூக்கத்தினின்று எழுந்து ஜீவனது உண்மை நிலையை வெளிப்படுத்தி அவனை இறைவனது தொண்டனாக ஆக்குகிறது. அவன் தொண்டினால், பக்தியினால், அன்பினால், என்றும் இறைவனுடன் கட்டுண்டவனாகின்றான். உலகில் கட்டுண்ட ஆன்மாவிடத்து பக்தி எழுகின்றபோது அது தனது உண்மை நிலையை நினைவு கூர்கின்றது. மீண்டும் கண்டுகொள்கின்றதே அன்றி அது புதிதாகத் தேடிக்கொண்ட ஒரு பண்பு அன்று.
    'ஜீவர்கள் இருபெரும் பிரிவினராக, பந்தமுற்று நிலைஉலகில் கட்டுண்டோர்களாகவும் என்றென்றும் விடுதலை அடைந்த நித்திய முக்தர்கள் ஆகவும் அமைவதோடு இவ்விரு சாரார்க்கும் இடையே, பந்தமுற்ற ஜீவர்களுள் உட்பிரிவுகள் உண்டு. இவ்வுட்பிரிவுகள் ஜீவர்கள்து ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்தன. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய மூன்று வகைகளை உலக உயிர்ப்பொருளிடை காணுகிறோம். மனிதரிடையேயும் இத்தகைய வேறுபாடுகள் உண்டு. அவ்வேறுபாடுகட்குக் காரணமாக அமைவன ஆன்மீக நிலையில் உள்ள வேறுபாடுகளேயாகும்.
    சில, ஆன்மாக்கள் நன்கு முன்னேறியுள்ளன. சில முன்னேறாது அடுத்தடுத்து படிநிலைகளில் உள்ளன.சில