பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 த கோவேந்தன்

சிந்தனைக்கெட்டாத பேதா பேத உறவால் திருத்தி நெறிப்படுத்துகிறது எனக் கொள்கின்றனர்.

   பிரம பரிணாம வாதம் பிரபஞ்சத்தை உண்மையெனக் கொள்கிறது. பிரபஞ்சம் பிரமத்தின் பரிணாமம் எனக் கருதுகிறது. பிரமப் பொருளில் மாற்றம் ஏற்படுவதையே பரிணாமம் எனக் கருதுகிறது. பிரமப் பொருளில் மாற்றம் ஏற்படுவதையே பரிணாமம் எனக் குறிக்கப் பெறுகிறது.
    பிரமப் பரிணாம வாதத்திற்கு எதிராகச் சைதன்யரைப் பின்பற்றுவோர் சக்தி பரிணாம வாதத்தைத் தருகின்றனர்; சிற்றுயிர்கள், எல்லைக்குட்பட்ட உயிர்கள், பிரமத்தின் பரிணாமங்கள் அல்ல; பிரமத்தின் அசிந்திய சக்தியின் மாற்றமாகும். எனக் கொள்கின்றனர். பிரமத்தின் சொரூப சக்தி சித் சக்தி எனவும், ஜீவ சக்தி எனவும், மாயா சக்தி எனவும் தொழிற்படுகின்றன. இவ்வாற்றல்களின் தொழிற்பாடு இன்னது என வரையறை செய்யவொண்ணாததாக விளங்குகிறது. இக்கருத்து, பிரமத்தின் முழுமைத் தன்மையை அதன் கடந்த நிலையில் காப்பதாகும். ஆயினும் சிந்திக்க வொண்ணாத பேதாபேத முறையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களைப் பெற்றுப் பிரமத்தை உலகத்தோடு ஒன்றாவதாகவும் இது கருதுகின்றது.
                                             米