பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 த கோவேந்தன்

     நிருவிகற்ப அறிவு என்பது வரையறையற்ற காட்சியாகும். இக்காட்சியில் வேறுபாடுகள் புலப்படுவது இல்லை. புறப்பொருள்கள் உணர்வதன் பொருட்டே' இருப்பன என்பது, இராமானுஜர் கருத்து; அவை நமது உணர்வினுள் இருப்பன அல்ல. 
    ஞானம் புறப்பொருள்களை ஒளிரச் செய்து புலப்படுத்துகின்றது. அறிவு ஆராய்ச்சி இயலிலே ஒரு கருத்துமுறை உலகு உண்மையை வற்புறுத்துவதாகும். மற்றொரு கருத்துமுறை புறஉலகு ஒருவனது கருத்தில் மட்டும் அமைவது என்னும் கருத்து முதற்கொள்கையை வற்புறுத்துவதாகும். இவ்விரு கருத்து முறைகளும், இருவேறு கருத்து எல்லைகளை உணர்த்துவனவாகும்.
    முற்றிலும் மாறுபடுகின்ற இந்த இருவேறு கருத்துக்களைக் கொள்வதனால் நேரும் இடர்பாடினை, இராமனுஜர் தவிர்க்கின்றார். புறப்பொருள்கள் ஆன்மா உணர்வதன் பொருட்டே என்றும் புறப்பொருள்கள் உணர்வினுள் இருப்பன அல்ல என்றும் விளக்கி அவ்விடர்ப்பாட்டை எளிதில் தவிர்க்கின்றார். உலகு உண்மைக் கருத்தானது பொருள் புறத்து அமைவது என்றும், உணர்வினால் தெரிந்துகொள் என்றும் அமைகின்ற பொழுது பொருந்துலதேயாகும்.
    “புறஉலக உண்மை கருத்தினால் ஆக்கமுறுவது என்று கூறினால் பொருந்தாது. கருத்து முதற்கொள்கை, உலகத்தைப் பற்றிய உணர்வு, புற உலகம், புறத்தே இருப்பதைக் கொண்டுணர்ந்தது அன்று. அதற்கு முன்னரே உள்ளது என்பதை வற்புறுத்துவதாகும். கருத்தினால் ஆக்கமுற்றது புறவுலகு என்ற அளவில் கருத்து முதற்கொள்கை உண்மையாகும். உணர்விற்கு அயலாகப் பொருள் புறத்தே அமைவது என்பதைக் கருத்து முதற் கொள்கை மறுக்கிறதே.
    அறிவு எப்பொழுது எழுகிறது? ஆன்மா, அல்லது 'சித்’ என்பது ஆன்மா அல்லாத அல்லது 'அசித்”