பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 த. கோவேந்தன்

நிலைநாட்டுகிறது; காரணத்தை வரையறை செய்கிறது: காரணத்தால் காரியம் நிகழ்கிறது. என்பதைச் சுட்டி, காரணம் இது என்று குறிக்கிறது.

    அறிவு, தனி உண்மைகளை ஏற்கிறது. ஆனால் இத் தனி உண்மைகள் பேருண்மையினைத் தரமாட்டா. உரையளவை பல ஆன்மிக உண்மைகளின் தொகுதியாகும். சாத்திரங்கள் இத்தகைய உண்மைகளைத் தாங்கி நிற்கிறது. ஆன்மிக உண்மைகள் உண்மை நாட்டமுடையோரால் தேறத்தக்கனவாகவும், தேறப் பெற்றனவாகவும் அமைகிறது. இவ்வாறு அமையும் உண்மைகள், பொருந்தும் அறிவின் அடிப்படையாகும்.
    மேலே குறிப்பிட்டபடி படிப்படியே உண்மை நிறைவடைவதை காணுகிறோம். மறுப்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இங்கு உண்மை விளங்கவில்லை. இங்கு உண்மை என்பது பொய்யாக நிறுவப்பெறுதற்கு உரிய நிலையில் இல்லாதது என்ற பொரு ளிலும் கருதவில்லை. அறிவின்மை அல்லது அவித்தை நம்மிடத்தில் இயற்கையில் உள்ள மறைப்பு அன்று.
    அவித்தை என்பது கருமம் ஆகும். அது எல்லைக் குட்பட்ட ஜீவனின் நிறைவுறாத நிலையாகும்.நிறைவுறாத நிலையில் அமையும் குறைகளைக் களைந்து வெற்றி காணுகிறபோது ஒருவன் பிரமத்தை நாடு வோனாக - விரும்பு வோனாகக் காணப் பெறுகிறான்.

உண்மை இயல்

    விசிஷ்டாத்வைத உண்மை இயலின் முக்கியக் கருத்து பரம்பொருளும் கடவுளும் ஒன்றெனக் கொள்வதாகும். புலன் கடந்த பொருளியலில் பரம்பொருள், முழுமுதற் பொருளும் சமய உலகில் ஈஸ்வரன், சகுணப் பிரமமும் இவ்விரண்டும் ஒன்றே என விசிஷ்டாத்வைதம் கூறுகிறது. இதுவே விசிஷ்டாத்வைத உண்மை இயலின் முக்கிய உண்மையாகும்.