பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 த கோவேந்தன்

தவிர்க் வொணாத நிலையில் பிரபஞ்சமே இல்லை, என்று மறுக்கும் கொள்கையும் சூன்யவாதமும் ஆகிவிடும்.

    இராமனுஜர், பாஸ்கரரின். நிர்க்குண சகுண இருமைக் கொள்கையை மறுப்பதை ஏற்கிறார். ஆனால் பாஸ்கரரது உபாதிகளைப் பற்றிய பகுதிகளை ஏற்பதில்லை. உபாதிகள் பற்றி கொள்கை இறைவனுக்குக் குறையைக் கற்பிப்பதாகும் என்கிறார்.மேலைநாட்டின் பிளோடினஸ் (Plotinas), ஸ்பினோஸா (spinoze), ஹெகல் (Hegal), ஆகியோர் சொல்கின்ற பரம்பொருட் கொள்கைகள், பேதா பேதத்தைப் பெரிதும் ஒத்தனவாக அமைகின்றன. விசிஷ்டாத்வைத்தோடு ஒத்ததாகக் காணப்பெறவில்லை.
    பிளோடினஸ் ஒன்றினின்று பல தோன்றுதல் கூடும் என்ற கருத்துடையவர். ஸ்பினோலா உள்பொருள் ஒன்றெனவும் அவற்றின்மாறுநிலைகள் இரண்டு எனவும் கூறுகின்றார். ஹெகல். மாறுபடும் இயல்புடையவை, ஒன்றாகின்றன என்று கருதுகிறார். இக்கொள்கைகள் பாஸ்கரர் கொள்ளும் உபாதிக் கொள்கையின் பல்வேறு வடிவங்களாகும். பொசான்கே (Bosannaet) பரம்பொருள் கொள்கையை அடைமொழி யோடு சேர்த்து வழங்குகிறார்.இக்கொள்கையும் பரம்பொருளிற்குக் குறைகளைக் கற்பிப்பதாகும்.

    வேதாந்தக் கொள்கைகளுள் பிரமத்தின் கடந்த நிலையைப் பிரபஞ்சத்தினோடு ஒத்தாகக் கருதுகின்ற எக்கொள்கையும் அனைத்திறைக் கொள்கையாகக் கருதப்பெறுவதற்கு இல்லை. வேதாந்தக் கொள்கையின் வரலாற்றிலே சங்கரரது வேதாந்தத்திற்கும் இடைவெளி கால இடையீடு காணப்பெறுகிறது. இக்கால இடைவெளினால் ஒரு மாற்றம் விளைகிறது. இம்மாற்றம் காலத்தினால் மட்டும் நிகழ்வதன்று, உண்மை இயலிலும் கருத்து மாற்றம் நிகழ்வதைக் காணுகிறோம்.