பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 27

பெறுகின்றது எனின் ஆனந்தம் பிரம்மத்தின் குணம் எனக்கொள்ளல் வேண்டும்.

பிரம்மத்தைச் சரீரி என்று அழைக்கிறோம். சரீரி என்பது ஒரு உட்பொருள் ஒன்றைக் கொண்டது எனக் குறிக்கின்றது. பிரமம், அனைத்துயிர்க்கும், பொருட்கும், ஆதாரமாக விளங்குவது; அனைத்தையும் ஒழுங்குக் கட்டுப்படுத்துவது; அனைத்திற்கும் இலட்சியம் ஆவது: இம்மூன்றின் ஊடே நிலவும் ஒருமையாகப் பிரமம் கருதப்பெறுகிறது.

பிரம்ம் அனைத்து உயிர்க்கும்பொருட்கும், பிறப்பிட மாகிறது. சித் அசித் உயிருள்ளன, உயிரற்றன. அனைத் தையும் உள் நின்று இயக்குவதாகக் கட்டுப்படுத்துவதாக அல்லது வரையறை செய்வதாகப் பிரமம் அமைகிறது. இவை அனைத்தும் அதற்கு நிறைவளிப்பதற்கே உள்ளன. உபநிடதத்தில் 'அந்தர்யாமி வித்தை' என்பது பிரமம் அனைத்தையும் உள்நின்று இயக்குகின்ற உண்மையினை உணர்த்துவதாகும். இவ்வுண்மையினைப் புலப்படுத்தும் மூலபாடம் வருமாறு: 'ஜீவனுள் உறைபவன், ஜீவனோடு உள்ளவன், ஜீவனால் அறியப்படாதவன், ஜீவன் பிரம்மத்திற்கு ஊடாக அமைகிறவன், ஜீவனை உள்ளிருந்து ஆள்கின் றவன், அனைத்துயிர்க்கும் ஆன்மா ஆவான்; என்றென் றும் உள்ளவன் ஆவான். அறியப்படாதவன், மனமும் புலன்களும் துணை செய்யாத நிலையிலேயே அறிபவன், அவனன்றி வேறு எவரும் அறிபவராக இல்லை. பிரம்மத்திற்கு அயலாக உள்ள அனைத்தும் தீமையே. பிரமம் வாழ்வின் உட்பொருளாகும். பிரமம்'வாழ்வை உள்ளி ருந்து இயக்குவோன் ஆகும். அடைவதற்குரிய நெறியாகவும், இலட்சியமாகவும் ஒருங்கே பிரமம் அமைகிறது. பிரமம் ஆதாரமாகும். நமது வாழ்வின் ஆதாரம் எனவும் குறிக்கலாம். பிரமத்தினிடத்து நமது