பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 த கோவேந்தன் ஆதாரம் அமைவதால் நாம் பிரமத்தில் உயிர்ப்பதாகவும் இயங்குவதாகவும் வாழ்வின் சிறப்பினைக் காண்ப தாகவும் கூறலாம். உள்பொருள் அனைத்திற்கும் உள்ளத்துளமர்ந்த ஆதாரமாகப் பிரமம் விளங்குகிறது. உள்ளபொருள் அனைத்திற்கும், உள்பொருளாவது பிரமமே. ஆன்மீகத் தொடர்புக்கு மிக இன்றியமையாததாகிய ஆன்மாவிற்கும், இறைவனுக்கும் இடையே அமையும் உறவை இக்கருத்து உணர்த்துகின்றது. “யாவும் இறையே, இறையே யாவும்” என்கிற அனைத்திறைக் கொள்கைப் போக்கை இது தவிர்க் கிறது.ஆன்மாவிற்கும்பரமான்மாவிற்கும்இடையேயுள்ள வேறுபாட்டினை இது ஏற்கிறது. ஆனால் ஆன்மாவும், இறைவனும் தனித்து உள்ளன என்பதை மறுக்கிறது. பிரமம் யாவற்றையும் கடந்தது என்பதை வற்புறுத்து வதற்காகவும் அறநெறிச்சமயம்வேண்டுமென்றநோக்கத் திற்கு ஊக்கம் தருவதாகவும் அமைகிறது. வேதத்துள் கடமையைச் செய்க என்பது கட்டளை யாக விளக்கப் பெறுவதைப் பூர்வமீமாம்சை நமக்கு உணர்த்துகிறது.இதிலிருந்து மாறுகின்ற நிலையைவேதாந் தத்துள் இறைவன் பிரபஞ்சமனைத்தையும் ஒழுங்குக் குள்ளாக்கின ஆள்வோனாகக் கருதுவது உணர்த்தும் பிரமம், அனைத்துயிர்க்கும் ஆன்மாவாக விளங்குகிறது என்பது ஆதாரமாக இருப்பதாகும். பிரமம் பிரபஞ்சத்தை ஒரு நியதிக்குள்ளாக்குபவன் என்பது, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு இயக்கு வோனாகக் குறிப்பதாகும். பிரமம் ஆட்சி புரிகிற தூயோனாக, நிறையுடையோனாக விளங்குகின்றான்; ஆகையால் புலன் இன்பங்களிலும்பாவச்செயல்களிலும் தோய்த்துள்ள மனிதனின் வேராகப் பிரமம்