பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 29 ஈஸ்வரன் பிரபஞ்சத்தை அறநெறியில் இயக்கு வோனாக, ஜீவர்கட்குக் கருமத்தின்படி இன்ப துன்ப நுகர்வுகளைப் பகிர்ந்து தருவோனாக, கருமப் பயன்களை ஊட்டுவோனாக விளங்குகிறான். ಟ್ವಿಟ್ಟಿ இயங்கும் அறநெறி, அறஆணை. மனம்போன பேர்க்கிலே அமை வன அல்ல. இங்குத் தெய்வ அறநெறியில் கொடுமை இல்லை. ஜீவர்கள் தாம் புரிந்த கருமங்கட்கு ஏற்பப்பய்ன்களை ஈஸ்வரன் ஊட்ட நுகர்கின்றனர். அவரவர் கருமத்திற்குரிய பயன்களைத் தருவது, வரையறை செய்வது, கரும நியதியாகும் நேரும் பிழைகட்குப் பழி வாங்கும் சட்டம், கணித முறையிலும், சட்ட முறையிலும் அமைகின்றது. இங்குப்பிழை செய் வோன் மீள்வதற்கு வழியில்லை. நம்பிக்கையுமில்லை. விசிஷ்டாத்வைதம் அறநெறி களை வற்புறுத்தும் சமயமாகும். உலகை ஆளுவோனாகிய ஈஸ்வரனை, உலகத்தை ரகசிப்போனாக விசிஷ்டாத் வைதம் மாற்றுகின்றது. அறநேர்மையாகிய சரும நியாயம், தயையை, கிருபையை அடிப்படையாகக் கொண்ட சமயத்தில் நிறைவு காண்கிறது. கிருபை, அறவழியில் அமையும் நிலைகளைத் தணிப்பது அன்று. படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இறைவனிடத்துக் கிருபையால் உந்தப்பெறுகிறது. இவ்வார்வம் அறமாகவும், அன்பாகவும் இருவகை வடிவம்கொள்கிறது.ஈஸ்வரன் உயிர்களித்துக் கொண்டி ருக்கும் பெருங்கருணையினால் உந்தப் பெற்றுப் பிரபஞ் சத்தில் நெருக்கடியான சூழ்நிலை அமைகின்ற பொழுது இறங்கி வந்து மனித உருக் கொண்டு, மனித இனத்தை உய்விக்கிறார்; இழந்த ஆன்மாவை மீண்டும் பெறுகின்றார். - - கடந்த நிலையில் உள்ள பிரமம் மூவகையான திடமான உருவங்களைக் கொள்கிறது. இவ்வுருவங்கள்