பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 31 உண்மையான ஆன்மா கூறவது, “நான் வாழ்கிறேன்; ஆனால் வாழ்வது நான் அல்லேன் இறைவன் என்னுள்ளே வாழ்கிறான்” என்பதாகும். இக்கருத்து மனித நிலையில் உள்ள செயலுரிமை உணர்விற்கும் தெய்வீகச் செயலுரிமை உணர்விற்கும் இடையே ஏற்படு கின்ற இருமையினை மாற்றுகிறது; இருமை கெடுகிறது. பிரமம் புவனசுந்தரம் என்று கூறப்பெறுகிறது. இதன் பொருள்: உயரிய அழகுடையோன் என்பதாகும். தலைசிறந்த அழகுடையவனாதல், அனுபூதி நெறிக்குப் பெரிதும் வேண்டுவதாகும். உண்மை, நன்மை ஆகிய பண்புகளைவிட அழகு, முக்கியமாகும். விசிஷ்டாத்வைத் தில் அழகுணர்வின் அடியாக எழும் மெய்ப்பொருளியில் பாகவதத்தில் நிலைபெறுகிறது. ஆழ்வார்கள் அருளிச் செய்த தெய்வ நலம் வாய்ந்த பாடல்கள் பிரமத்தை பூர்கிருஷ்ணனாக, ஆன்மாக்களை இன்பத்துள் ஆழ்த்து வோனாக உடல் உணர்வினின்று அகற்றுவோனாக வலிய நீக்குவோனாக விளங்குகின்றன. மேற்குறித்த செய்திகளால் விசிஷ்டாத்வைதத்தில் காணப்பெறும் பிரம்ம, அத்வைதத்தில் அனைத்திறைக் கொள்கையிலும் கடவுட் கொள்கையிலும் காணப்படும் பிரம்மத்தின் வேறானது என்பது விளங்கும். விசிஷ்டாத் வைதம் அடைமொழிகேற்ற அத்வைதம், சிறப்பொடு கூடிய அத்வைதம் தழுவிய அத்வைதம், என்று குறிப்பது தவறான உணர்வாகும். விசிஷ்டாத்வைதம் அனைத்து உயிர்ப் பொருள் ஒருமையைக் கூறுவது என்பதும், தவறேயாகும். வேதாந் தத்தின் தொகுப்புக் காட்சியினை விசிஷ்டாத்வைதம் வழங்குகிறது. விசிஷ்டாத்வைதம், பல கொள்கைகளின் திரட்டெனக் கொள்வதும், அதன் உண்மை நிலையினை அறியாது மயங்குவதாகும். விசிஷ்டாத்வைதம் மிக விரிவுடைய கொள்கை ஆதலால் நல்லன அனைத்தையும், உண்மையான அனைத்