பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 * த கோவேந்தன் தையும் பிற கருத்து முறைகளினின்றும் பிரிவுகளினின் றும் ஏற்பதாகும். உள்பொருள் ஒன்றே என்கிற கடுமை யான ஒருமைக் கொள்கையையும், ஆள்வோன், இரr:கன் என்னும் இருநிலைக் கொள்கையையும் ஒன்று சேர்க்கும் இடம், ஒன்றை ஒன்று சந்திக்கும் இடம் விசிஷ்டாத்வைதமாகும். - உபநிடதங்களில் காணும் பிரமத்தை அல்லது நாராயணனை, பாஞ்சராத்தரத்தில் காணும் வாசு தேவனை, புராணங்களில் காணும் ஈஸ்வரனை,இதி காசங்களில் காணும் அவதாரங்களை, அனுபூதி நறி யில் காணும் சுதந்தரத்தை, சமநிலையில் வைத்து ஒரே காட்சியாக விசிஷ்டாத்வைதம் காணுகிறது.