பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 த கோவேந்தன் அறிதல் கூடும் என்றுவேதாந்தம் முடிவு காண்பது, நமக்கு விளங்கும். பிரமம் உள்ள்து; இணையற்றது; அது பலவாதல் வேண்டும் என்ற விருப்ப்த்தினை உள்பொருள் ஏற்கிறது; ஏற்கும்பொழுது, மாமருட உலகமாக உருக்கொள்கிறது. படைப்பு ஆர்வமே, இதற்குக் காரணமாகும். இறைவன், படைப்பிற்கு முன்னால் நாமரூபவேறுபாடின்றி விளங்கு கிறார். இதே வகையில் படைப்பிற்குப் பிறகு பலவாகப் பிறப்பு உற்று, எல்லையில்லாத கால, இட உலகு ஆகவும், உயிர்களாகவும், இவையனைத்திற்கும் அக ஆன்மாவாக வும், இறைவன் விளங்குகிறான். - பிரபஞ்சம், பெளதிக நிலையிலும், அற அமைப் பிலும், ஒரு ஒழுங்கு உடையதேயாகும். இவ்வொழுங்கு இறைவனது ஆற்றலால் அமைவதாகும். அறம் குன்றி மறம் ஒங்குகிற பொழுதெல்லாம், ஈஸ்வரன் பிரபஞ்சத்தை அழித்துத் தீமையி னின்று உலகைக் காக்கிறான். தீயன புரியும் ஆற்றல் ஜீவனின்று இறைவனது அருள் ஆற்றலால் நீங்குகிறது. தண்டனை, கிருபையின் விளைவாக இறுதி யில் அமைகிறது. படைப்பும், ஒடுக்கமும், மாறி மாறி இடையறாது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருக்கக் காண்கின்றோம்.இவ்வாறு நிகழ்வதன் நோக்கம், ஆன்மா விடுதலை அடைவதற்கேயாகும். மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மாறாத ஒரு தொடர்ச்சி உண்டு என்பதைக் காரண காரியக் கொள்கை விளக்கு கிறது.இயற்கை (பிரகிருதி) மாற்றங்கட்கு உட்படுவதாகும் (பரிணாமம்). பரிணாமம் என்பது மறைந்துள்ள ஆற்றல் தோன்றுவதேயாகும். இது காரணம், காரியத்தோடு தொடர்ந்தே அமைகிறது. ஆன்மாவிற்கு நிறைவு நோக்கி முயற்சிகள் கொள்கின்ற உரிமை ஒழுக்க உலகிலே இருக்கக் காண்கிறோம். இயற்கை நிகழ்ச்சிகளை ஆன்மா வின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்ப அமைக்கின்ற அக நோக்கு,