பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

35

இறைவனுக்கு உண்டு. ஆன்மாவினைத் தன்னுடைய மயமாக உருவாக்க விழைகின்றான். உள்ளது சிறத்தலாகிய முறைமை நிகழ்ச்சிகள் இயற்கையில் நிகழ்கின்றன என்பதைச் சாங்கியத்தில் காண்கிறோம். சாங்கியத்தில் இருபத்தைந்து தத்துவங்கள் பேசப் பெறுகின்றன.

புருஷோத்தமன் அல்லது இறைவன் இருபத்தாறாவது தத்துவமாக அமைந்து, உள்ளது சிறத்தல்முறைமை யினை நிறைவுபடுத்துகிறான். இறைவன் படைப்பிலே புகுந்து நடுநாயகமாக உயர் ஆன்மாகவாக 'சரீரியாக' விளங்குகிறான். இறைவனது படைப்பார்வமே, பிரகிருதியை ஆற்றலோடு இயங்கி 'மகத்’, அகங்காரம், மனம் உட்பட பதினொரு அறிகருவிகள், ஐந்த தன் மாத்தி ரைகள், ஐந்து பூதங்கள், ஆகியவற்றைத் தோற்றுவிக்கச் செய்கின்றது.

இவ்வாறு தனித்தனியே பல பொருட்கள், பல உயிர்கள் தோற்றம் கொள்வது தொடர்ந்து நிகழ்கிறது. ஈஸ்வரன் ஜீவர்களுள் அக ஆன்மாவாக அமைந்து அந்தந்த ஜீவனுக்குரிய உடல்களை நடுவு நிலைமை பிறழாது, பழைய கருமத்திற்கு ஏற்ப வழங்குகிறான். இவ்வாறு, அணு உயிரினின்று இறைவன் வரை எண்ணிறந்த ஜீவர்களின் தோற்றம் ஏற்படுகிறது. உள்ளது சிறத்தல்முறை, தோற்றத்தைக் குறிப்பது போல மீண்டும் தோன்றிய முறையே ஓடுங்குகின்ற முறைமையினால் தொடரப்பெறுகிறது.

தோற்றமும் ஒடுக்கமும், முறையாக நிகழ்வன. படைப்பு என்பது முடிவாக நோக்குமிடத்துப் புதிய படைப்பாகின்றது. அல்லது ஈஸ்வரனது லீலையாக அமைகிறது. பரிணாமக் கருத்தும், அறச் சட்டமாகிய கருமமும் புதிய விளக்கங்கள் பெறுகின்றன. பிரகருதி, புருஷன், புருஷோத்தமன் ஆகியவற்றின் உண்மை ஏற்கப்பெறுகின்றது. இயற்கைக் கொள்கை, கருத்து