பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
த.கோவேந்தன்

முதற்கொள்கை, ஆளுமைக் கொள்கை ஆகிய கொள்கைகளே, முடிந்த முடிவுகளாகக் கூறப்பெறுவதை விசிஷ்டாத்வைதம் தவிர்க்கிறது.

இயற்கையில் காணும் உள்ளது சிறத்தலாகிய முறைமை ஆன்மாவின் முன்னேற் றத்திற்கு துணை புரிவதாகும்; தெய்வத் தன்மை பெறுவதற்கும் பெரிதும் துணை நிற்பதாகும். பிரம ஞானத்தை ஆன்மா பெறுதல் வேண்டும் என்பதே வேதாந்தத்தின் முக்கிய விருப்பமாகும். இயற்கை பற்றிய உண்மை விளக்கமே பிரபஞ்சத்தின் அமைவியலாகும். பிரபஞ்ச அமைவியலை அறிவது பிரமஞானத்தை அறிவதற்கு மறைமுகமாக உதவுவதாகும்.