பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
த.கோவேந்தன்

ஆன்மா, நிலைத்தது, தொடர்ச்சியுள்ளது என்ற கருத்தினை விசிஷ்டாத் வைதிகள் ஏற்கின்றனர். இக்கருத்தைக் பெளத்தர்கள் மறுக்கின்றனர். மனம் ஓர் அக உறுப்பாகும். மனமே இப்பிரகிருதியின் ஒரு மாறு நிலையாகும். மனம் ஆன்மீகப் பொருள் அன்று. அறிவு முதற்கொள்கையினர் அல்லது கருத்து முதற்கொள்கை யினர் ஆன்ம உண்மையைக் குறித்துக் கூறுவது: “நான் உள்ளுகின்றேன். ஆகையால் உள்ளேன்” . இது உணர்வு, பல படி நிலைகளில் அமைவதைப் புறக்கணிக்கின்றது. பல நிலைகளில் உணர்வு பிழைபடுகிறது. இவ்வாறு பிழைபடுவதையும் அறிவு முதற்கொள்கையினரும், கருத்து முதற்கொள்கையினரும் புறக்கணிக்கின்றனர்.

நான் இருப்பதால் சிந்திக்கின்றேன் என்று கூறுவது பொருந்துவதாகும். சமுதாய இயல் அறிஞர்களும், ஆன்மாவைக் குறித்துக் கருதும்பொழுது பிழைசெய்கின்றனர். சமுதாய உயிர்ப்பொருளின் ஒரு மூலக் கூறு என ஆன்மா அவர்களால் கருதப்பெறுகிறது. அடைமொழிகேற்ற கொள்கை ஆன்மாவினைப் பரம்பொருளின் கூறு என்று ஆன்மா கருதப்பெறுமானால் ஆன்மாவிற்கு எனத் தனித்தொரு பண்பு இல்லாமல் போகிறது. தனித்ததொரு பண்பு உள்ளதைச் சமுதாய இயல் அறிஞர் காரண காரியத்தோடு. புறக்கணிப்பதால் ஆன்மாவைப் பரம் பொருளின் கூறு எனக் கொள்கின்றனர்.

அத்வைதத்தில் ஜீவன் பிரமத்தின் பொய்த்தோற்றம் என்று குறிக்கக் காண்கிறோம். அவித்தையில் பிரமம் பிரதி பிம்பிக்கின்றபொழுது ஜீவன் தோன்றுகிறது. ஜீவன் வெறும் கற்பனையே, கனவே என்றும், அது அறப்பண்போ சமயப் பண்போ அற்றது என்றும், ஒருமைக் கொள்கை கருதுகின்றது.

இராமானுஜர்மேற்குறித்த கருத்துகளை மறுக்கிறார். ஆத்மன் என்ற சொல் ஆன்ம இயல்புகளை நன்கு