பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

39

வெளிப்படுத்துகிறது. என்றென்றும் ஆன்மா தன்னுணர்வோடும் கட்டு நீங்கியும் விளங்குவதாகும்.மேலைநாட்டில் ஆன்மாவைக் குறிக்கும் சொற்கள் (Soul, Spirit or Self) ஆகியவை ஆன்மா என்ற சொல் குறிக்கும் பொருளைத் தரமாட்டா. மேலும், மேலை நாட்டில் வழங்குகின்ற சொற்கள் ஆவி, உயிராற்றல் ஆகிய பொருள்களையும் வழங்குவனவாக அமைகின்றன.

ஆன்மா ஒரு தத்துவம், பரம்பொருள்போல் என்றும் உள்ள பொருள். புலன் கடந்த பொருளியலில், அளவை இயலில் அக உணர்வின் மூலமாக அறிய வேண்டுவது ஆன்மாவாகும். அனுபவ வழி அறிவினாலே ஆன்மா வேண்டுவது ஆன்மாவாகும். அனுபவ வழி அறிவினாலே ஆன்மா அறியவொணாதது. ஆன்மாவின் உண்மைப் பொருளும் பண்பும், அக உணர்வினாலேயே அறியப்பெற வேண்டும். ஆன்மா தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்வது, தன் உண்மையைத் தானே நிறுவவல்லது.

ஆளவந்தார், இராமானுஜர், வேதாந்ததேசிகர் ஆகியோர் கீதைக்குத் தருகின்ற விளக்கம் ஆன்மாவின் இயல்பினை நமக்கு நன்கு உணர்த்துகின்றது. ஆன்மா பிரகிருதியினின்றும், பரமாத்மாவினின்றும், வேறுபடுவதாகும். பிரகிருதியின் இருபத்து நான்கு தத்துவங்கட்கு அயலானதாக ஆன்மா அமைகிறது. ஆன்மா, என்றென்றும் உள்ளதாகத் தன்னொளியோடு கூடியதாக அறவாழ்விலே கட்டின்றி விளங்குவதாக அமைகிறது. முன்னர் நேர்ந்த அறியாமையினால் விளையும் மயக்கத்தின் காரணமாக ஆன்மா, பிரகிருதியோடு ஒத்தது என எண்ணி உடற் சிறையில் கட்டுண்டு, பல பிறவிகள் எடுத்து உழலுகின்றது.

அகத்துறவினால் ஆன்மா தனது உண்மை இயல் பினை உணரக்கூடும். இவ்வாறு தன்னுணர்வு அமைகிறபொழுது ஆன்மா அகந்தையினின்று விடுதலை காண்கிறது. அகந்தை நீங்குகிற பொழுது ஆன்மா, தனது