பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40
த.கோவேந்தன்

இயல்பான உண்மை நிலையினை அறியும். ஜீவன், ஆன்மீக ஆற்றல் பொருந்தியது: அணுவிற்கு அணுவாய் உள்ளது. ஆனால் ஆன்மாவின் ஞானமோ எல்லை கடந்தது; ஒளிபோல எங்கும் நிறைவது. இந்நிலையில் கருமத்தால் ஆன்மாவின் ஆற்றல் எல்லைக்குட்படுகிறது.

ஆன்மாவின் ஞானம் சுருங்கவோ விரியவோ இயலும். சுருங்குதலும், விரிதலும் ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ப அமையும். உள்ளது சிறத்தது முறைமையில் ஒடுக்கத்தில் பல நிலைகளை நாம் காண்பதற்குக் காரணம், ஆன்மா கருமத்தால் கட்டுறுவதேயாகும். கருமத் தலையைப் பொறுத்து ஆன்மாவின் ஞானம். ஆன்மா, உறக்கத்தில் செயற்று, உணர்வற்று இருக்கிறது. கனவு நிலையில் ஒருவாறு உணர்வோடும், ஒருவாறு உணர்வற்றும், விளங்குகிறது. விழிப்பு நிலையில் நல்ல தெளிவோடு விளங்குகிறது.

திரிபுக் காட்சி, மயக்கம், தன்னறிவு அற்ற நடுக்கம், ‘ஹிஸ்டீரியா’ போன்ற முறை பிறழ்வான அல்லது இயல்புக்கு மாறான நிலைகளிலே ஆன்மா தனது இயல் பினை மறக்க நேர்கிறது.

மேற்குறித்த பிறழ்வான நிலகள், ஒன்றில் ஒன்று கலப்புண்டு, தொடர்ந்து அமைவன. ஆனால் இருளும், ஒளியும் போலத் தம்முன் முரண்பட்டவையாக அமையவில்லை. கனவு நிலைகளை ஆராய்கின்ற உள்ளத்து இயலார், கனவுகள் உணர்த்தும் சமய உண்மைகளையும் அற உண்மைகளையும் புறக்கணிக்கின்றனர். உள்ளத்தைப் பகுத்து ஆராய்கின்றவர்களும், அகநிலைக் கொள்கையினரும் கனவுகள் உணர்த்தும் சமய உண்மைகளையும் அற உண்மைகளையும் புறக்கணிக்கின்றனர்.

உள்ளத்தைப் பகுத்து ஆராய்கின்றவர்களும், அகநிலைக் கொள்கையினரும் கனவுகள் உணர்த்தும்