பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்,

43

பொருளையே இராமனுஜர் அவித்தைக்குத் தருகின்றார். அவித்தையைக் கருமத்தோடு ஒத்தது என்றும் வாழ்க்கையில் காணும் குறைவுகளாகிய அவித்தையும் அவித்தை, கருமம், காமம் ஆகியவை ஜீவனால் நிகழ்வன என்றும் இராமனுஜர் விளக்குகிற பொழுது ஒரு புதிய விளக்கத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு ஜீவனும் இறைவனிடத்திலிருந்து தோன்றி நீங்கப்பெற்று நிறைவு அனைத்தும் கொண்டு இறை நிலைக்கு ஏற்றப் பெறுகிறது.