பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைக்கு வழி

சிந்தனை மிகுந்த மெய்ப்பொருளியல் அறிஞர்கள் பிரமத்தின் இயல்பு குறித்து ஆராய்ந்து, பிரமத்தைப் பரம்பொருள் அல்லது தத்துவம் என்று கருதுகின்றனர். மெய்ப்பொருள் அறிஞர் பரம்பொருளை இவ்வாறு ஆய்ந்து ஆய்ந்து காண்பவர்கள் விடுதலை வேட்கை மிகுந்து விடுதலையை நாடுகின்றவர்களாக ஆகின்றனர். ஆன்மீக நெறி நின்றும், அறநெறி நின்றும் விடுதலையை தேடுவோர் முக்தி அடைகின்றனர் விடுதலையை மூவகை முறைகளால் அடையலாம்.

ஒன்று கரும யோகம் இது தன்னைத்தானே தூயனாக்கிக் கொள்ளுதல் ஆகும். இரண்டு ஞானயோகம்; இது தன்னுணர்வுபெறுதல் ஆகும். மூன்று பக்தியோகம், இது இறைவன் அன்புவடிவாக உளன் என்பதை உணர்ந்து கீதையில் வரையரை செய்யப்பெற்றவாறு அன்பு நெறியில் பயிலுதல் ஆகும்.

கரும யோகம் நிஷ்கர்ம கருமம் ஆகும். பயன் கரு தாது, தனக்குரிய கடமையை உணர்ந்து வழுவாது கடமைக்காவே கடனாற்றுதல் நிஷ்கர்ம கருமம் எனப் பெயர்பெறும். ஒருவரும் செயலற்று இருக்க முடியாது. இறைவன் கூடச் செயலற்று இருத்தல் இயலாது. அறிவு அல்லது உணர்வு எல்லா நிலைகளிலும் செயல் நிலைகளாகவே அமையக் காண்கிறோம். செயல்கள் அனைத்தி-