பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 47 கோளாக அமைகிறது. இது ஆண்மீகப் பண்பாடாகும்; ஞான நிஷ்டையாகும் இப்பண்பாடு, தன்னலமறுப்பை வற்புறுத்துகிறது. இடையறாத தியானத்தைப் பயிலச் செய்கிறது. இவ்வாறு ஒழிவு அறத் தியானிக்கின்றவன். யோக நெறிகளால் அவித்தையினால் விளையும் மயக்கங்களை - உடல் உணர்வுகளை - காம விருப்பங் களை நீக்கிக் கொள்கிறான். முற்றிலும் நீங்கிய, பற்றற்ற நிலையினைக் கைவல்யத்தைத் தேடுகிறான். கைவல்நிலை, ஞான யோகத்தால் அடையப் பெறுகிறது.இந்நிலை பற்றற்ற அக நிலையாகும்.இந்நிலை ஒர் அகநிலை ஆதலால் அகநிலைக் கொள்கை செய லற்று இருத்தல் ஆகிய கொள்கைகளில் உள்ள குறை களால் குறையுறுதல் இயலும், இக்குறைகளைப் பக்தி யேர்க்த்தால் என்ரிதில் மாற்றிக் கொள்ளலாம். கரும யோகத்தாலும், ஞான யோகத்தாலும் ஒருவன் கொள்ளும். முயற்சிகட்கு எல்லாம் நிறை நிலையாகப் பக்தியோகம் அமைகிறது. அறவாழ்வு,சமய வாழ்வு அனுபூதி ஆகிய படிகளைக் கொண்டதொரு ஏணியை விசிஷ்டாத்வைதம் அமைத்தது. சமய வாழ்வுக் சமயவாழ்விலிருந்து அனுபூதி வாழ்வுக்கும் படிகள் அமைகின்றன. இராமானுஜர் தொன்மையான ஏழுவகைப் பயிற்சி நெறிகளைப் பக்தியின் துணையாகக் குறிக்கிறார். அவை விவேகம், விமோகம், அப்யாசம், கிரியை, கல்யாணம், அனசவாதம், அனுதர்ஷம் ஆகிய ஏழும் ஆகும். இத்தூய்மைக்கு அடுத்திருப்பதே தெய்வத் தன்மையாகும். விமோகம் என்பது, வெகுளி, அவா ஆகிய தொல்லை தருகின்ற நிலைகளினின்று நீங்கிப் பற்றற்ற அகத்துறவு ஆகும். அப்யாசம் என்பது, இறை உண்மை யினை இடையாறாது பயிலுதல் ஆகும். இறை வனை அனைத்துயிர்க்கும் ஆன்மாகவாகப் புலன் உணர்வில் உள்ளவனவாக நினைந்து பயிலுதல் ஆகும். இறை. உண்மையினை நினைந்து வாழ்கின்ற ஒருவன் சமுதாயத் திற்கு ஆற்றுகின்ற கடமைகளே கிரியை ஆகும்.