பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 த கோவேந்தன் அனைத்து யிர்க்கும், கீழ்நிலை உயிர்கள் முதலாக, மனிதர்கள், தேவர்கள், ஆகிய அனைத்திற்கும் செய்யும் தொண்டு இதுவாகும். கல்யாணம் என்பது, கடனாற்று கின்றபோது அகத்தே உயரிய பண்புகளைப் போற்று வதாகும். தான் (ஈகை) அஹிம்சை (நோவன செய்யாமை) ஆகிய இரண்டும் உயரிய பண்புகளாகும்.இவை முக்கியம் வாய்ந்தவை. இறுதியில் குறிக்கப்பெற்ற அனவசாதமும், அனுதர்ஷமும் ஒருங்கே இன்பத்துள் தூய்க்காது துன்பத் தால் கலங்காமல் வாழ்கின்ற நிலைகளாகும். மேற்குறித்த பயிற்சிகள் அனைத்தும் உடல், உள்ளம், ஒழுக்கம், ஆன்ம நலம், சமயம் ஆகிய துறைகளில் மனிதன் வளர்ச்சி பெறுவதற்குத்துணை நிற்பன; பக்திக்கு முற்றும் துணையாவன. கிரேக்கர்கள், ஒருவனிடத்துக் காணும் விலங்கு மனித, ஆன்மீக, இயல்புகளை ஒருமைப்படுத்தக் கருதினர். விசிஷ்டாத்வைதம் மேலே விளக்கிய எழு வகைக் பயிற்சிகளையும் கிரேக்கர்கள் கொண்ட கருத்திலே அமைக்கவில்லை.

  • சங்கரர் கூறும் சாதனைகள் சாதனைகளே அல்ல. பிரமம் யாவற்றிலும் தேர்ந்து நிறைந்தது ஆதலின் அது புதிதாகப் பெறுவது ஒன்றுமில்லை. புலன்கடந்த பொரு ளியில் பரம்பொருள், பகவான் அல்லது சமயத்தின் கடவுள் ஆகும். இராமானுஜர் கருத்தின்படி வேதாந்தம் அல்லது பிரமஞானம் என்பதும், தியானம் அல்லது உபாசனை அல்லது பரம்பொருளை இடையறாது நினைத் தல் என்பதும், பக்தி என்பதும் ஒரே பொருளான ஞானம், பக்தி என்பவ்ை அவற்றின் உள்தொடர்பையும், அவற்றின் ஒற்றுமையையும் உணர்த்து வன. தியானம் என்பது இறக்கும்வரை ஒழிவின்றி, வாசுதேவன் அல்லது நாராயணன் நமது அக ஆன்மா எனவும், "உனது தூய, புனிதமான தெய்வீகமே நான்; நீ யானாகவே விளங்கு கிறாய்”எனவும்.இடையறாது ஆழ்ந்த சிந்தனையுய் ஆழ்தல் ஆகும.